Tuesday, June 24, 2014

உதடு கருப்பா இருக்கா? அப்ப எலுமிச்சையை பயன்படுத்துங்க... Ways To Use Lemon Juice To Make Lips Lighter

பொதுவாக பெண்கள் தங்கள் உதடுகள் பிங்க் நிறத்தில் வைத்துக் கொள்ள, லிப்ஸ்டிக், லிப் கிளாஸ் போன்றவற்றைப் பயன்படுத்துவார்கள். அப்படி உதடுகளுக்கு கெமிக்கல் கலந்த பொருட்களை அதிகம் பயன்படுத்துவதால், நாளடைவில் உதடுகளானது இயற்கையான நிறத்தை இழந்து, கருப்பாக மாற ஆரம்பிக்கிறது. அதுமட்டுமல்லாமல் தற்போதைய காலத்தில் பெண்களும் ஆண்களுக்கு நிகராக சிகரெட் பிடிக்கிறார்கள். 
 
இப்படி சிகரெட் புகைப்பதால், உதடுகளானது நிறத்தை இழந்து, கருமையாக மாறிவிடுகிறது. ரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா..இப்படிப் பண்ணிப் பாருங்களேன்... கிடைக்கும்! எனவே உதடுகள் இழந்த நிறத்தை மீண்டும் பெற வேண்டுமானால், முதலில் சிகரெட் புகைப்பதை நிறுத்துவதுடன், கெமிக்கல் கலந்த பொருட்களை உதடுகளுக்கு பயன்படுத்தாமல், இயற்கை பொருட்களைக் கொண்டு உதடுகளைப் பராமரிக்க வேண்டும். 
அதிலும் ப்ளீச்சிங் தன்மை அதிகம் நிறைந்த எலுமிச்சையைப் பயன்படுத்துவது மிகவும் சிறந்தது. இங்கு கருமையாக இருக்கும் உதடுகளை பிங்க் நிறத்தில் மாற்ற எலுமிச்சையை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பார்த்து, தினமும் முயற்சித்து வந்து, அழகான உதடுகளைப் பெறுங்கள்.

எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் எலுமிச்சையில் உள்ள அசிடிக் ஆசிட், உதடுகளை அதிகம் வறட்சியடையச் செய்யும். எனவே இதனை தனியாக பயன்படுத்தாமல், அதனுடன் அந்த அசிடிக் ஆசிட்டின் சக்தியை குறைக்கும் பொருளை சேர்த்து கலந்து பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அதிலும் எலுமிச்சை சாற்றினை கிளிசரின் உடன் சேர்த்து கலந்து, உதடுகளுக்கு தடவி வந்தால், உதடுகளில் உள்ள கருமை நீங்குவதுடன், உதடுகளும் மென்மையாகும்.

எலுமிச்சை ஜூஸ் பாம் எலுமிச்சை சாற்றினால் செய்யப்பட்ட லிப் பாம்களை உதடுகளுக்குப் பயன்படுத்தி வந்தால், அவை கருமையைப் போக்கி, உதடுகளை நாளடைவில் பிங்க் நிறத்தில் மாற்றும். எனவே எலுமிச்சை நிறைந்த லிப் பாம்களை வாங்கி பயன்படுத்துங்கள்.

எலுமிச்சை சாறு மற்றும் நெய் நெய் கூட உதடுகளை மென்மையாகவும், உதடுகளில் உள்ள கருமையையும் போக்கும். அதிலும் நெய்யில் 2 துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, தினமும் இரவில் படுக்கும் போது தடவி வந்தால், அவை விரைவில் உதடுகளில் உள்ள கருமையைப் போக்கிவிடும்.

எலுமிச்சை மற்றும் ரோஸ் வாட்டர் எலுமிச்சையை ரோஸ் வாட்டருடன் சேர்த்து கலந்து, தினமும் உதடுகளுக்கு தடவி வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

எலுமிச்சை சாறு இல்லாவிட்டால், எலுமிச்சை சாற்றில் சிறிது நீர் கலந்து, அதனை உதடுகளுக்கு தடவும் முன், லேசாக உதடுகளின் ஒரு முனையில் தடவி எந்த ஒரு பக்க விளைவும் ஏற்படாவிட்டால், பின் உதடுகளுக்கு தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.




No comments:

Post a Comment