Showing posts with label Mobile. Show all posts
Showing posts with label Mobile. Show all posts

Tuesday, December 1, 2015

உங்கள் கைகளில் தவழும் மொபைல் ஃபோன் பற்றி நீங்கள் அறிந்திராத சுவாரஸ்யமான தகவல்கள்! Mobile Phone

மொபைல் என்றால் யாருக்குதான் ஆசையில்லை, அதுவும் ஸ்மார்ட் போன் என்றாலே எல்லாரும் ஆசை தான். நம்மில் பலர் பணம் கொடுத்து வாங்கும் போனை சரியாக பயன்படுத்தாமல் வீணாக்கி விடுகின்றோம். நீங்கள் செய்யும் சிறிய தவறுதான் ஆனால் எவ்வளவு நஷ்டம். பலர் போனை துடைத்து வைக்கின்றோமே தவிர அதை எப்படி பயன்படுத்துவது என்று அறிந்து கொள்வதில்லை. முக்கியமாக சார்ஜ் செய்யும் பொழுது செய்யும் சிறிய தவறுகளால் உங்கள் போனை பலி கொடுத்து விடுகின்றீர்கள். சார்ஜ் முடிவதற்குள் போன் முடிந்துவிடுகின்றது.

உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பேட்டரியை சார்ஜ் செய்ய நிறைய நேரம் எடுத்து கொள்ளலாம். உங்களுக்கு மட்டும் இந்த பிரச்சனை இருக்கின்றது என்று நீங்கள் நினைத்தால் சற்று ஆறுதல் அடையுங்கள். ஏன் என்றால் உங்களை போல் பலருக்கும் இந்த பிரச்சனை உண்டு. ஆண்ட்ராய்டு போனை பயன்படுத்தும் பலருக்கு இந்த பிரச்சனை சமீபத்தில் உள்ளது. உங்கள் ஸ்மார்ட்போனை வேகமாக ரீசார்ஜ் செய்ய இதோ உங்களுக்கு சில டிப்ஸ்.

இதனால் உங்கள் ஸ்மார்ட் போன் பேட்ரியின் ஆயுளை நீடிக்க முடியாது என்றாலும் வேகமாக சார்ஜ் செய்ய வைக்க முடியும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

யுஎஸ்பி கேபிளை சோதனை செய்யுங்கள்
யுஎஸ்பி கேபிள் நல்ல கேபிளாக இல்லையென்றாலும் சார்ஜ் வேகமாக நடைபெறாது. எப்போதும் ஸ்மார்ட்போனுடன் சேர்ந்து வரும் கேபிளை பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. மலிவாக கிடைக்கின்றது என்று வாங்கினால் நஷ்டம்தான்.


சரியான பவர் சப்ளை வேண்டும் 
நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய உங்கள் கணினியை பயன்படுத்தி இருந்தால் பவர் வீக்காக இருந்தாலும் சார்ஜ் வேகமாக நடைபெறாது. யுஎஸ்பி கேபிள் சரியாக இல்லையென்றாலும் சார்ஜ் வேகமாக இருக்காது. ப்ளக் மூலம் சார்ஜ் செய்யாமல் வயர்ல்லெஸ் மூலம் சார்ஜ் செய்தாலும் சார்ஜ் செய்ய அதிக நேரம் ஆகும்.


மோசமான அடாப்டர் வேண்டாம்
யுனிவெர்சல் சார்ஜர் அல்லது பிராண்ட் அல்லாத அடாப்டரை பயன்படுத்தி உங்கள் ஸ்மார்ட்போனுக்கு சார்ஜ் போடுவதை தவிர்க்கவும். உங்கள் ஸ்மார்ட் போனுக்கான சார்ஜரை அதாவது போன் வாங்கும்போது கூடவே வரும் சார்ஜரை பயன்படுத்தி சார்ஜ் ஏத்தவும். இவ்வாறு செய்வதால் உங்கள் போனுக்கு விரைவாக சார்ஜ் ஏத்த முடியும்.


காலம் கடந்த ஸ்மார்ட்போன் வேண்டாம்
நீங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் காலங்கடந்த போனாக அதாவது மிகவும் பழையதாக இருந்தால் சார்ஜ் ஆக நேரமாகும். சமீபத்திய போன்கள் டர்போசார்ஜிங் திறன்களை கொண்டு வருகின்றன. உங்கள் போன் சார்ஜர் மெதுவாக சார்ஜ் ஏத்தினால் நீங்கள் டிவைசை மாற்ற வேண்டும் என்று புரிந்து கொள்ளுங்கள்.


மோசமான பேட்டரி வேண்டாம்
பேட்டரிகளை பற்றிய தொகுப்புகளை போன் தயாரிப்பாளர்கள் வழங்கு கின்றனர். அதை முழுமையாக படித்து உங்கள் பேட்டரி மோசமானது அதாவது ஒரிஜினல் அல்ல என்று அறிந்தால் உடனே மாற்றி விடுங்கள். இப்படி செய்வதால் விரைவில் சார்ஜ் ஏத்த வசதியாக இருக்கும். குறிப்பாக பழைய பாட்டரி சார்ஜ் ஆக அதிக நேரம் எடுத்து கொள்ளும்.

சார்ஜர் 
சார்ஜ் ஆகும் பொழுது போனை பயன்படுத்த வேண்டாம் சிலர் போனுக்கு சார்ஜ் ஏத்திக் கொண்டிருக்கும் போதே போனை பயன்படுத்துவார்கள். இது முற்றிலும் தவறு. சார்ஜ் ஏறும் பொழுது போசுவதால் சார்ஜ் மெதுவாக ஏறும் அதோடு உயிருக்கு கூட ஆபத்து வரும் என்று அறிந்திருப்பீர்கள். புரிந்து கொள்ளுங்கள்.


செயலி
பின்னணி பயன்பாடுகளை (Background Applications) அணைத்து வைக்கவும் அதாவது போனில் மெயில். பேஸ்புக், என பல பயன்பாடுகள் இருக்கலாம். அவற்றை அணைக்காமல் சார்ஜ் ஏத்தினாலும் சார்ஜ் மெதுவாக ஏறும். ஆகவே சார்ஜ் மெதுவாக ஏறினால் உங்கள் நெட் பயன்பாடுகள் அனைத்து வைக்கப் பட்டுள்ளதா என்று பார்க்கவும். இதை கடமையாக செய்யாமல் உங்கள் போனை காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செய்தாலே நன்றாக பழகி விடும்.


செட்டிங்ஸ்
பயன்படுத்தாத அமைப்புகளை (செட்டிங்ஸ்) அணைத்து வைக்கவும். சில நேரங்களில் நீங்கள் உங்கள் போனில் பயன்படுத்தாத செட்டிங்ஸ் அதாவது வை-பை, ப்ளூடூத், போன்ற அமைப்புகளை அணைத்து வைக்காமல் போனை சார்ஜ் செய்தாலும் சார்ஜ் மெதுவாக ஏறும். ஆகவே செட்டிங்ஸ் அணைத்து வைக்க பட்டுள்ளதா என்று பார்த்து சார்ஜ் செய்யவும்.


ஸ்விட்ச் ஆஃப்
சார்ஜ் ஆகும் போது போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து வைக்கவும். ஸ்மார்ட் போன் பேட்டரியை விரைவில் சார்ஜ் செய்ய போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து பின் சார்ஜில் போட வேண்டும். இதை விட சார்ஜை வேகமாக செய்ய நல்ல முறை கிடையாது. இதனால் சார்ஜில் இருக்கும் போது போன் வருவதையும் நாம் அதை எடுத்து பேசுவதையும் தவிர்க்க முடியுமே.


யுஎஸ்பி போர்ட் மோசமாக இருக்கலாம் 
என்ன அதிர்ச்சியாக உள்ளதா. ஆமாம் ஸ்மார்ட்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து பின் சார்ஜ் போட்டால் சார்ஜ் வேகமாக நடக்கும். இதை செய்தும் மெதுவாக ஏறினால் உங்கள் யுஎஸ்பி போர்ட் முடிந்து விட்டது என்று நினைத்து கொள்ளுங்கள். இந்நிலையில் உங்கள் போனை நல்ல ஸ்மார்ட் போன் ரிப்பேர் செய்யும் கடைக்கு எடுத்து சென்று சரி செய்யவும்.

Saturday, October 18, 2014

ஆன்டிராய்டு போனை சூப்பரா யூஸ் பண்ணணுமா? இதோ சூப்பர் டிப்ஸ் android_use_001



பலரும் ஸ்மார்ட் போனில் உள்ள சில சிறப்பம்சங்களை தெரிந்து கொள்ளாமலே போனை பயன்படுத்தி வருகின்றனர்.

Thursday, October 16, 2014

அதி வினைத்திறன் கொண்ட கமெராவினை கொண்ட ஸ்மார்ட் கைப்பேசி lg-g3_smart_mobile

LG நிறுவனம் இரு மாதங்களுக்கு முன்னர் LG G3 எனும் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது.

Monday, August 25, 2014

செல்பி ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்யும் சோனி sony_xperia

சோனி நிறுவனமானது செல்பி புகைப்படங்களை எடுத்து மகிழ்வதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட Sony Xperia C3 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை இந்தியாவில் அறிமுகம் செய்கின்றது.

Thursday, August 21, 2014

ZTE அறிமுகம் செய்யும் Nubia 5S Mini ஸ்மார்ட் கைப்பேசி

ZTE நிறுவனம் Nubia 5S Mini எனும் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

Saturday, July 26, 2014

கொசுக் கடி தாங்கலியா.. கையில் செல்போனை வச்சிகிட்டு இனிமே அப்படி சொல்லாதீங்க An Android app can turns your phone into a mosquito repellent

 ஸ்மார்ட்போனின் மூலமாக கொசுவையும் விரட்ட வழி பிறந்துவிட்டது முடியும். அதற்கான புதிய அப்ளிகேஷனை அமெரிக்க நிறுவனம் ஒன்று தயாரித்து அறிமுகம் செய்துள்ளது.

Sunday, July 13, 2014

வளைத்தால், திருகினால், கத்தியால் குத்தினால் பாதிப்படையாத கையடக்க தொலைபேசி திரை iPhone 6 Sapphire Crystal Display! [Video]

வளையக்கூடிய, திருகக்கூடிய, கீறல் விழாத கத்தியால் குத்தினாலும் உடையாத 4.7 அங்குல அளவான கையடக்கத்தொலைபேசி திரையொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக யு ரியூப் தொழில் நுட்ப விமர்சகரான மார்க்கஸ் பிரவுண்லீ உரிமை கோரியுள்ளார்.

Monday, July 7, 2014

அதிகம் விற்பனை ஆகும் காஸ்ட்லி மொபைல்களின் பட்டியல்..! highly sales costly mobiles right now

இன்றைக்கு ஸ்மார்ட் சந்தையில் குறைந்த விலை ஸ்மார்ட் போன்களின் விற்பனைக்கு சரியாக அதிக விலை ஸ்மார்ட் போன்களும் விற்பனை ஆகின்றது. காரணம் அதில் உள்ள அதிக ஆப்ஷன்கள் எனலாம்,

Tuesday, June 24, 2014

நோக்கியா இன்னொரு ஆண்ட்ராய்டு மொபைலை வெளியிட்டது...! Microsoft Mobile Launches Nokia X2

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நோக்கியா ஆண்ட்ராய்டு சந்தையில் குதித்தது நாம் அனைவரும் அறிந்ததே ஆகும். முதன் முதலில் நோக்கியா வெளியிட்ட ஆண்ட்ராய்டு மொபைல் நோக்கியா X ஆகும் 

Monday, June 23, 2014

சோனி வெளியிட்ட 20MP கேமரா உள்ள மொபைல்...! Sony Xperia Z2: Top Features

இன்றைக்கு சாம்சங்கின் கேலக்ஸி S5 மொபைலின் விற்பனையானது நினைத்த அளவிற்கு இல்லை என்றே கூறலாம்.

Sunday, June 22, 2014

Android 5.0 பதிப்பில் Kill Switch வசதி

Kill Switch என்பது கைப்பேசிகள் மற்றும் அதிலுள்ள தவகல்கள் திருட்டுப் போவதிலிருந்து பாதுகாப்பினைத் தரும் அப்பிளிக்கேஷன் ஆகும்.

Thursday, June 19, 2014

ஸ்மார்ட்போனில் இன்டர்நெட் பயன்பாடு...! worldwide smartphones connected with internet

இன்றைக்கு உலகம் முழுவதும் ஏறத்தாழ 400 கோடி மக்கள் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இவர்கள், இந்த போன்களின் வழியே இணைய வசதிகளைப் பெறுவதில்லை.

64GB மெமரியுடன் அமேசான் வெளியிட்ட பிரம்மாண்ட மொபைல்...! Amazon launches Fire phone with dynamic 3D perspective ...

இன்றைக்கு ஸ்மார்ட் போன் சந்தை என்பது மிகவும் அதிகமாக இலாபம் கிடைக்கும் ஒரு சந்தையாக உருவாகிவிட்டது எனலாம். 

Wednesday, June 18, 2014

32GB இன்பில்ட் மெமரியுடன் மைக்ரோமேக்ஸ் வெளியிட்ட புது மொபைல்...! micromax-canvas-gold-a300-mobile

இன்று சாம்சங்கிற்கு இணையாக அதிகமான மொபைல் மாடல்களை தினந்தோறும் வெளியிட்டு வருகின்றது மைக்ரோமேக்ஸ் நிறுவனம்.

Tuesday, June 17, 2014

Micromax அறிமுகம் செய்யும் விண்டோஸ் கைப்பேசிகள்


Micromax நிறுவனம் விண்டோஸ் 8.1 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட Canvas Win W121 மற்றும் W092 எனும் இருவகையான ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்யவுள்ளது.

Monday, June 16, 2014

Motorola நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு

ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியில் சிறந்து விளங்கும் HTC நிறுவனம் கைப்பேசிகளின் திரைகள் உடைந்தால் அவற்றினை இலவசமாக மாற்றித் தரும் சலுகையினை பயனர்களுக்கு வழங்குகின்றது.

Sunday, June 15, 2014

அறிமுகப்படுத்தப்பட்டது Skype 5.0 பதிப்பு


iPhone ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான ஸ்கைப் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.