Sunday, June 22, 2014

Android 5.0 பதிப்பில் Kill Switch வசதி

Kill Switch என்பது கைப்பேசிகள் மற்றும் அதிலுள்ள தவகல்கள் திருட்டுப் போவதிலிருந்து பாதுகாப்பினைத் தரும் அப்பிளிக்கேஷன் ஆகும்.
இந்த வசதி முதன் முதலில் அப்பிள் சாதனங்களில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் Windows Phone இயங்குதளத்திலும் இந்த வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை கூகுள் நிறுவனமும் தனது அன்ரோயிட் இயங்குதளத்தின் புதிய பதிப்பான Android 5.0 இல் Kill Switch அப்பிளிக்கேஷனை உள்ளடக்கியதாக அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இம்மாதம் 25 மற்றும் 26ம் திகதிகளில் சன்பிரான்ஸிஸ்கோவில் இடம்பெறவுள்ள கூகுள் IO Developer மாநாட்டில் இது தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
(லங்கா சிறி)

No comments:

Post a Comment