Tuesday, June 24, 2014

நோக்கியா இன்னொரு ஆண்ட்ராய்டு மொபைலை வெளியிட்டது...! Microsoft Mobile Launches Nokia X2

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நோக்கியா ஆண்ட்ராய்டு சந்தையில் குதித்தது நாம் அனைவரும் அறிந்ததே ஆகும். முதன் முதலில் நோக்கியா வெளியிட்ட ஆண்ட்ராய்டு மொபைல் நோக்கியா X ஆகும் 


அதையடுத்து தற்போது நோக்கியா X2 என்ற ஆண்ட்ராய்டு மொபைலை நோக்கியா வெளியிட்டுள்ளது. 4.3 இன்ச்சில் வெளியிட்டுள்ள இந்த மொபைலில் 1GB க்கு ரேம் மற்றும் 5MP க்கு கேமரா 0.3MP க்கு பிரன்ட் கேமரா ஆகியவற்றை கொண்டுள்ளது. 

மேலும் இது ஆண்ட்ராய்டின் பழைய பதிப்பான ஜெல்லி பீனில் இயங்கக்கூடியது இந்த மொபைல் மேலும் 4GB க்கு இன்பில்ட் மெமரியும் இந்த மொபைலில் உள்ளது. நோக்கியா இன்னொரு ஆண்ட்ராய்டு மொபைலை வெளியிட்டது...! ADVERTISEMENT இந்த மொபைலின் இந்திய விலை ரூ.8 ஆயிரமாகும் இதைவிட குறைந்த விலையில் மோட்டோரோலா வெளியிடும் மோட்டோ இ (Moto E) மொபைல் இன்னும் அதிக ஆப்ஷன்களை கொண்டு வெளிவருகின்றது. 

நோக்கியா தற்போது ஆண்ட்ராய்டு மொபைல்களை வெளியிட்டு வருவது காலம் கடந்து வந்த ஞானம் என்றே கூறலாம் விற்பனையில் ஒன்றும் பெரிய அளவில் நோக்கியாவால் நிச்சயம் சாதிக்க முடியாது. காரணம் அன்று நோக்கியா தவறவிட்ட மொபைல் சந்தையை இன்று பல நிறுவனங்கள் பிடித்துவிட்டன.

(tamil.gizbot.com)

No comments:

Post a Comment