Wednesday, June 18, 2014

மெதுவாக உண்ணுங்கள் மெல்லியராக மாறுங்கள் eat-slowly-chew-well-become-thin

“இவள் சரி­யான வேலைக் கள்ளி. கோப்­பைகள் கழு­வு­கிற வேலை தன்ரை தலை­யிலை விழுந்­து­விடும் என்று மெல்ல மெல்லச் சாப்­பிட்டு கடைசி ஆளாத்தான் எழும்­புவாள்” என அம்மா மகளைப் பற்றிப் புறு­பு­றுத்தாள்.
“இவ­வோடை டின்னர் சாப்­பிடப் போனால் கடைக்­காரன் பூட்டப் போறன் என்று அவ­ச­ரப்­ப­டுத்தி எழுப்­பி­னால் தான் எழும்­புவாள்” என்று நக்கல் அடித்­தவர் “வாய் நோகாமல் சாப்­பிட்டு ஸ்டைல் காட்­டுவா” என நீட்டி முடித்தார்.

மற்­ற­வர்கள் தவ­றெனக் காரணம் காட்டிப் பேசி­னாலும் நக்கல் அடித்­தாலும் சிலரால் தமது பழக்­கத்தை மாற்ற முடி­யாது. இருந்த­போதும், சில பழக்­கங்கள் நன்­மையும் தரலாம். மெது­வாக உண்­ப­வர்­களில் பலர் மெல்­லிய உடல் வாகி­ன­ராக இருக்­கி­றார்கள்.

மாறாக இன்­றைய உல­க­மா­னது அவ­ச­ரமும் நேர­நெ­ருக்­கடி மிக்­க­தா­கவும் மாறி­விட்­டது. பல்­வேறு பராக்­கு­க­ளுக்கு குறிப்­பிட்ட குறு­கிய நேரத்­திற்குள் கவனம் செலுத்த வேண்­டி­யுள்­ளது. அதுவும் அமெ­ரிக்கா போன்ற மேலை­நா­டு­களில் இதன் தாக்கம் மிக அதிகம். உணவின் சுவையை இர­சிப்­ப­தற்கோ, நன்கு மென்று தின்­பதற்கோ நேர­மின்றி வாயில் போடு­வதும் விழுங்­கு­வ­து­மாக அடித்துப் பிடித்து ஓடு­கி­றார்கள். இத­னால்­ தானோ என்­னவோ அவர்கள் பெரும்­பாலும் குண்டுப் பீப்­பாக்கள் போலத் தோற்­ற­ம­ளிக்­கி­றார்கள்.

மெது­வாக உண்ணல் அண்­மையில் செய்­யப்­பட்ட ஒரு ஆய்­வா­னது, ஆறு­த­லாகச் சாப்­பி­டு­வ­தா­னது உடல் நலத்­திற்கு நன்மை பயக்கும் எனச் சொல்­கி­றது. 35 அதிக எடை­யுள்­ள­வர்­க­ளையும் 35 சாதா­ரண எடை உள்­ள­வர்­க­ளையும் கொண்டு 2 நாட்­க­ளுக்கு மட்டும் செய்­யப்­பட்ட ஆய்வு பற்­றிய தகவல் Journal of the Academy of Nutrition and Dietetics சஞ்­சி­கையின் ஜன­வரி 2ஆம் திகதி இதழில் வெளி­யா­கி­யுள்­ளது.

அதன் பிர­காரம் சாதா­ரண எடை உள்­ள­வர்கள் ஆறு­த­லாகச் சாப்­பி­டும்­போது வழ­மையை விட 88 கலோ­ரிகள் குறை­வா­கவே உள்­ளெ­டுத்­தி­ருந்­தனர். ஆனால் அதிக எடை­யுள்­ள­வர்கள் 58 கலோ­ரிகள் குறை­வாக உள்­ளெ­டுத்­தி­ருந்­தனர். வேறு­பா­டுகள் இருந்­த­போதும் உட்­கொண்ட கலோரி வலுவில் குறைவு ஏற்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. உணவின் அளவு கட்­டுப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. தங்கள் தேவைக்கு ஏற்ப உண்ட போதும் இது நடந்­தது.

ஆறு­த­லாக சாப்­பி­டு­வது என்­பது சுமார் 22 நிமி­டங்­களை எடுத்­தது. விரை­வாகச் சாப்­பி­டு­வது சுமார் 8 நிமி­டங்­களை எடுத்­தது.

ஆறு­த­லாக சாப்­பி­டும்­போது அதீத எடை­யுள்­ள­வர்கள் வழ­மையை விட 33 சத­வி­கிதம் அதி­க­மாக நீர் அருந்­தி­னார்­களாம் எனவும் அந்த ஆய்வு கூறி­யது. அதேவேளை சாதா­ரண எடை­யுள்­ள­வர்­களும் சற்றுக் குறை­வாக அதா­வது 27 சத­வி­கிதம் அதி­க­மாக நீர் அருந்­தி­னார்­களாம்.

சாப்­பிட்டுக் கொண்­டி­ருக்கும் போது இடையில் நீர் அருந்தக் கூடாது என்ற நம்­பிக்கை எங்­களில் பல­ரி­டையே இருக்­கி­றது. உணவு சமி­பாட்டு நொதி­யங்­களை (enzymes) நீர்த்துப் போகச் செய்து சமி­பா­ட­டை­வதைப் பாதிக்கும் என்­பது தவ­றான கருத்­தாகும். மாறாக உதவக் கூடும். உணவுத் துகள்­களை சிறி­ய­தாக்கி கரையச் செய்­வதால் சமி­பாடு துரி­த­மாக்கி விரைவில் உறிஞ்ச செய்யும் என்­பதே உண்­மை­யாகும்.

இந்த இடத்தில் மற்­றொரு விட­யத்­தையும் ஞாப­கப்­ப­டுத்­தலாம். ஒருவர் உணவு உட்­கொள்­கையில் வயிறு நிறைந்த உணர்வை அவர் பெறு­வ­தற்கு உட்­கொள்ள ஆரம்­பித்த நேரத்­தி­லி­ருந்து சுமார் இரு­பது நிமி­டங்கள் மூளைக்குத் தேவைப்­ப­டு­கி­றது என்­ப­தாகும்.

இதைத் தவிர ஜப்­பானில் 1700 இளம் பெண்­க­ளி­டையே செய்­யப்­பட்ட மற்­றொரு ஆய்வும் ஆறு­த­லாகச் சாப்­பி­டு­வதால் விரை­வி­லேயே வயிறு நிறைந்த உணர்வு ஏற்­ப­டு­கி­றது என்றும் அதனால் அவர்கள் உள்­ளெ­டுக்கும் உணவின் கலோரி வலு குறை­வா­கவே இருக்­கி­றது எனவும் கூறி­யது.

University of Rhode Island செய்­யப்­பட்ட மற்­றொரு ஆய்­வா­னது ஆறு­த­லாக உண்­ப­வர்கள் நிமி­டத்­திற்கு 28.4 கிராமை உட்­கொள்­வ­தா­கவும், இடை­ந­டு­வான வேகத்தில் உண்­ப­வர்கள் நிமி­டத்­திற்கு 56.7 கிராமை உட்­கொள்­வ­தா­கவும், வேக­மாக உண்­ப­வர்கள் நிமி­டத்­திற்கு 88 கிராமை உட்­கொள்­வ­தா­கவும் கண்­ட­றிந்­தது.

நன்­மைகள் இவற்றை அடிப்­ப­டை­யாகக் கொண்டு ஆறு­த­லாக உண்­பதின் நன்­மை­களை நாம் சுல­ப­மாக ஊகித்து அறி­யலாம். ஆறு­த­லாக சாப்­பி­டும்­போது குறைந்த அளவு கலோ­ரி­களே உள்­ளெ­டுக்­கப்­ப­டு­கி­றது. இது ஏன்?

விரை­வாகச் சாப்­பி­டும்­போது வயிறு நிறைந்த உணர்வு ஏற்­ப­டாது.

எனவே அதீ­த­மாக உணவை உட்­கொண்­டு­வி­டு­வார்கள். மாறாக ஆறு­த­லாகச் சாப்­பி­டும்­போது கொஞ்சம் கொஞ்­ச­மா­கவே உணவு உட்­கொள்­ளப்­ப­டு­வதால் ஓர­ளவு உண்­ணும்­போதே 20 நிமி­டங்கள் கடந்­து­விடும். அப்­பொ­ழுது வயிறு முட்­டிப்­போச்சு என்­பது தெரி­ய­வரும். மேல­தி­க­மாக உட்­கொள்ள நேராது.

ஆறு­த­லாகச் சாப்­பி­டும்­போது நீர் அருந்­து­வ­தற்­கான வாய்ப்பு அதிகம் கிடைப்­பதால் உணவின் இடையே நீர் அருந்­து­வார்கள். இதுவும் வயிறு நிறைந்த உணர்வை கொடுத்து உணவின் அளவைக் குறைக்கச் செய்யும்.

நிதா­ன­மாகச் சாப்பிடும்­போது நன்கு மென்று உண்ணக் கூடி­ய­தாக இருக்கும். மென்று உண்­ணு­வதால் உணவு சற்று அதிக நேரம் வாயிற்குள் இருக்கும். உணவுச் செரி­மானம் எச்­சிலில் ஆரம்­பித்து­ வி­டு­கி­றது. எனவே ஆறு­த­லாகச் சாப்­ப­டும்­போது உணவு நன்கு ஜீர­ண­மாகும்.

உணவை ஆறு­த­லாக சாப்­பி­டும்­போது நாம் உண்ணும் அளவு குறையும். அதனால் எடை அதி­க­ரிப்பு தடுக்­கப்­படும் என்­பது உண்­மையே.

ஆறு­த­லாக உண்­ணும்­போது சுவை­களை சப்­புக்­கொட்டி ரசிக்க முடி­கி­றது. வாச­னையை நன்கு நுகர முடி­கி­றது. உணவு தயா­ரிக்­கப்­பட்ட விதத்­தையும் அதன் பதத்­தையும் உணர்ந்து கொள்ள முடி­கி­றது. அதனால் மனத் திருப்தி ஏற்­ப­டு­கி­றது. இதனால் உணவு உண்ணும் செயற்­பா­டா­னது மகிழ்ச்­சிக்­கு­ரி­ய­தாக இருக்கும்.

உணவு வேளையை மேலும் மகிழ்ச்­சி­யாக்க நாம் செய்ய வேண்­டி­யது என்ன?

இர­ச­னை­யோடு உண்­ணுங்கள் மென்­மை­யான இசையை பின்­ன­ணியில் இசைக்க வையுங்கள். பளீ­ரெனத் தெறிக்கும் ஒளி­களை அணைத்து மெல்­லிய இத­மான ஒளியை வையுங்கள். மெழுகு திரி ஒளியில் இரவு உணவு உண்­பது அற்­பு­த­மான அனு­ப­வ­மாக இருக்கும். வேறு சுவாரஷ்ய­மான விட­யங்­களில் மனத்தைச் செலுத்­தா­தீர்கள். தொலைக்­காட்சி பார்ப்­பது, விவா­தங்­களில் ஈடு­ப­டு­வது போன்­ற­வற்றைத் தவி­ருங்கள்.

உணவில் மட்­டுமே மனத்தைச் செலுத்­துங்கள். நாக்கும் மூக்கும் உங்கள் சுயஉணர்வை மிகைப்­ப­டுத்தி அரிய அனு­ப­வத்தைக் கொடுக்கும். உணவின் சுவையும் பதமும் உள்­ளத்தில் கிளர்ச்­சியை ஏற்­ப­டுத்தும். திருப்தி கிட்டும்.

மற்­ற­வர்­க­ளுடன் சேர்ந்து உண்­ணும்­போது, இடையில் ஒரு சில நிமி­டங்­க­ளுக்கு உண்­பதை நிறுத்தி அவர்­க­ளுடன் சில வார்த்­தைகள் பேசுங்கள். நேரம் கழியும் விரைவில் வயிறு நிறைந்த உணவு கிட்­டி­விடும். ஆயினும் சுவாரஷ்ய­மான விட­யங்­களை ஆரம்­பித்து அதில் மூழ்கி உண்ணும் அளவை மீறி­விடா­தீர்கள்.

நன்கு சாப்­பிட்டு வயிறு நிறைந்­தி­ருக்கும் தரு­ணத்­தில்­தானே பொது­வாக ஈற்­று­ணவு (dessert) வரு­கி­றது. இருந்­த­போதும் ஈற்­று­ணவின் இனிப்பும் நறு­ம­ணமும் நிறைந்த வயிறு நிறைந்­ததை மறக்க வைக்கும். மீண்டும் அவற்றை சாப்­பிடத் தூண்டும். எனவே உணவு முறையில் ஒரு தலை­கீ­ழான மாற்­றத்தை ஏற்­ப­டுத்­துங்கள்.

முதலில் ஈற்­று­ணவை சுவை­யுங்கள். கேக் அல்­லது புடிங் போன்ற எது கிடைத்­தாலும் சிறுகக் கடி­யுங்­கள். அதன் சுவையில் நனைந்த பின்னர் முக்­கிய உண­விற்கு செல்­லுங்கள். தேவை­யற்ற கலோ­ரி­களை உள்­ளெ­டுப்­பதை இதனால் தடுக்க முடியும்.

பழங்­களும் காய்­க­றி­களும் நிறைந்த உண­வு­களைத் தேர்ந்­தெ­டுங்கள். இவற்றைச் சப்பிச் சாப்­பிட கூடிய நேரம் தேவைப்­ப­டு­வதால் நீங்கள் ஆறு­த­லா­கவே சாப்­பிட முடியும். அது முன்­கூ­றிய நன்­மை­களைத் தரும்.

உணவு உட்­கொள்ளும் பாத்­தி­ரத்தை சிறி­தாகத் தேர்ந்­தெ­டுங்கள். இதனால் நீங்கள் உங்கள் கோப்பையில் பகிரும் உணவு மட்டுப்பட்டிருக்கும். அதனால் உண்ணும் அளவு குறையும்.

மெது­வாகச் சாப்­பி­டுங்கள் என்­பது சொல்­வ­தற்கு சுலபம். ஆனால் மும்மு­ர­மான வேலையில் இருக்கும் போது ஆற அமர இருந்து சாப்பி­டு­வது கஷ்­டம்தான். ஆனால் உணவு நேரங்­களை ஒழுங்­கு­ மு­றையில் கடைப்­பி­டித்து நேரம் தவ­றாது உண்­ணுங்கள். ஒழுங்கு முறையைக் கடைப்­பிடித்தால் நேரம் ஒதுக்­கு­வதில் சிர­ம­மி­ருக்­காது. ஒவ்­வொரு உணவு வேளைக்கும் குறைந்­தது 20 நிமி­டங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை ஒதுக்குங்கள்.

அத்துடன் ஒரு நேர உணவிற்கும் அடுத்த உணவிற்கும் இடையே நீண்ட இடைவெளி இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
மெதுவாகச் சாப்பிடுங்கள். நலம் மிக்க மெல்லிய உடலினராய் மாறி மகிழுங்கள்.

No comments:

Post a Comment