Monday, June 16, 2014

கனவுகளை வாசித்தறிவதற்கு உதவும் உபகரணம் - அமெரிக்க விஞ்ஞானிகளால் உருவாக்கம் dream-machines

ஒருவர் உறங்கும் போது அவரது கனவுகளை வாசித்தறிவதற்கு அவசியமான இயந்திரமொன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
 கலிபோர்ணிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மேற்படி  விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட உபகரணம் மனித மூளையின் பிரதிமைகளை ஊடுகாட்டும் கருவியின் மூலம் துல்லியமாக படமாக்கி அவற்றை திரையொன்றில் காட்சிப்படுத்தக் கூடியதாகும்.

இந்த விஞ்ஞானிகள் ஏற்கனவே மூளை ஊடுகாட்டும் கருவியிலிருந்து பெறப்பட்ட தரவுகளை மக்கள் நினைக்கும் முகத்தோற்றங்களை இனங்கண்டு மீள  கட்டமைக்கும் முயற்சியில் பயன்படுத்தியுள்ளனர்.

இதற்காக 6 பேரை எம்.ஆர்.ஐ. ஊடு காட்டும் கருவிக்குள் படுக்க வைத்து அவர்களுக்கு 300முக உருவப்படங்கள் காண்பிக்கப்பட்டன.

இதன் போது வெவ்வேறு முகங்களை பார்க்கும் போது மூளையில் ஏற்படும் மாற்றம் கணிப்பிடப்பட்டது.

இந்த தரவுகளின் அடிப்படையில் ஒருவரின் மூளையின் ஊடுகாட்டி உபகரணப் படங்கள் மூலம் அவர் நினைக்கும் உருவத்தை எதிர்காலத்தில் மீள்கட்டமைக்க முடியும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இதே தொழில் நுட்பத்தை மக்களது ஞாபகங்கள், சிந்தனைகள், கனவுகள் என்பவற்றை படமாக்க பயன்படுத்த முடியும் என அவர்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment