Tuesday, June 24, 2014

நல்லெண்ணெயை கூந்தலுக்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்!!! Sesame oil benefits hair growth

நம் முன்னோர்களுக்கு நீண்ட நாட்கள் வழுக்கை ஏற்படாமல், அவர்களின் முடி ஆரோக்கியமாக இருந்ததற்கு முக்கிய காரணம், அவர்கள் தங்கள் முடிக்கு பயன்படுத்திய எண்ணெய்களும் மற்றும் உணவுகளும் தான். அதிலும் குறிப்பாக வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியல் மேற்கொண்டது அவர்கள் கூந்தல் ஆரோக்கியத்திற்கான காரணம் என்றும் சொல்லலாம். ஏனெனில் நல்லெண்ணெயில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் மட்டுமின்றி, கூந்தலுக்கு பயன்படுத்தினால் இன்னும் ஏராளமான நன்மைகளைப் பெறலாம்.
 
 தேங்காய் எண்ணெயை கூந்தலுக்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்!!! எள் கொண்டு தயாரிக்கப்படும் இந்த எண்ணெய் பல்வேறு கூந்தல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை வழங்குவதுடன், முடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. இங்கு நல்லெண்ணெயை தலைக்கு பயன்படுத்தி வந்தால் கிடைக்கும் சில நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!

அழகான கூந்தல் கூந்தல் நன்கு பட்டுப்போன்று அழகாக மின்னுவதற்கு நல்லெண்ணெய் பெரிதும் உதவியாக உள்ளது. அதிலும் வாரம் ஒருமுறை நல்லெண்ணெயை வெதுவெதுப்பான சூடேற்றி, தலையில் தடவி மசாஜ் செய்து, நன்கு ஊற வைத்து குளித்து வந்தால், கூந்தல் நன்கு ஆரோக்கியமாகவும், பட்டுப்போன்று மென்மையாகவும் இருக்கும்.

கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் நல்லெண்ணெய் மசாஜை தவறாமல் வாரம் ஒருமுறை செய்து வந்தால், அவை ஸ்கால்ப்பில் உள்ள செல்களை புத்துணர்ச்சி அடையச் செய்து, கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.

கூந்தல் உதிர்தல் பொதுவாக கூந்தல் உதிர்தலானது மன அழுத்தம் மற்றும் டென்சனால் தான் ஏற்படுகிறது. இத்தகைய மன அழுத்தம் மற்றும் டென்சனை வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் மசாஜ் செய்வதன் மூலம் போக்கலாம். இப்படி மன அழுத்தம் மற்றும் டென்சன் குறைந்தால், கூந்தல் உதிர்வது குறைந்துவிடும்.

முடி வெடிப்பு நல்லெண்ணெயை தலைக்கு மசாஜ் செய்ய பயன்படுத்தினால், ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டமானது அதிகரித்து, மயிர்கால்களின் வளர்ச்சி அதிகரித்து, முடி வெடிப்பை சரிசெய்யும்.

மாசுக்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் நல்லெண்ணெயை தலைக்கு தவறாமல் பயன்படுத்தி வந்தால், அவை வெளியே செல்லும் போது மாசுக்களினால் கூந்தலுக்கு ஏற்படும் பாதிப்பை தடுத்து, நல்ல பாதுகாப்பை வழங்கும். இதனால் கூந்தலானது பாதிப்பு ஏதும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கும்.

பொடுகுத் தொல்லையை நீக்கும் முக்கியமாக பொடுகுத் தொல்லையினால் அவஸ்தைப்படுபவர்கள், நல்லெண்ணெயைப் பயன்படுத்தி மசாஜ் செய்து நன்கு ஊற வைத்து அலசினால், பொடுகுத் தொல்லை விலகும்.

நல்ல மாய்ஸ்சுரைசர் வாரம் ஒருமுறை இரவில் படுக்கும் போது நல்லெண்ணெயை தலைக்கு தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் குளித்து வர வேண்டும். இப்படி செய்து வந்தால், கூந்தல் வறட்சியடையாமல் எப்போதும் ஈரப்பதத்துடன் பொலிவோடு இருக்கும்.

இளநரையைத் தடுக்கும் நல்லெண்ணெயைக் கொண்டு வாரம் ஒருமுறை மசாஜ் செய்து, ஊற வைத்து குளிப்பதன் மூலம், இளநரை வருவதைத் தடுக்கலாம்.










No comments:

Post a Comment