Tuesday, June 17, 2014

அமோக ஆட்சி நடத்தும் விண்டோஸ் 7 windows_7

விண்டோஸ் 7 கணனிகளின் பயன்பாட்டில் இன்னும் முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

கடந்த மாதத்தில் மொத்த ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் 50% க்கும் அதிகமான பயனாளர்களைப் பெற்ற சிஸ்டமாக, விண்டோஸ் 7 இடம் பெற்றிருந்ததாக மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன.

புதிய பயனாளர்களை வசப்படுத்துவதில், விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 இடையே தான் பலத்த போட்டி இருந்து வருகிறது.

2009ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட விண்டோஸ் 7 இன்று 50%க்கும் மேலான பயனாளர்களைக் கொண்டு, முதல் இடத்திற்கான தங்கப் பதக்கத்தினைப் பெற்றுள்ளது எனலாம்.

இதற்கு முதன்மைக் காரணம், மக்கள் விண்டோஸ் எக்ஸ்பியை விட்டுவிடுவதுதான். ""விண்டோஸ் எக்ஸ்பியை விட்டுவிட மாட்டோம், தொடர்ந்து அதுதான் எங்களுக்கு ஓ.எஸ் எனப் பல பயனாளர்கள் கூறலாம்.

ஆனால், உண்மை என்னவென்றால், பலரும் மைக்ரோசொப்ட் அச்சுறுத்தலினால், அதனை விட்டு விலகுகின்றனர் என்பதே உண்மை.

மே மாதத்தில் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தியவர்கள் 25.27% ஆகக் குறைந்தனர். இது 2.42% இழப்பாகும். ஆனால், அதே காலத்தில், விண்டோஸ் 7 பயன்பாடு 48.77 சதவீதத்திலிருந்து 50.06% ஆக உயர்ந்தது.

விண்டோஸ் 8 பயன்பாடு 12.62% ஆக அதிகரித்தது. இது விண்டோஸ் 8 இன்னும் பயனாளர்களின் முழுமையான நம்பிக்கையைப் பெறவில்லை என்பதனையே காட்டுகிறது.

விண்டோஸ் 8.1 இப்போது மக்களிடையே பிரபலமாகி வருகிறது. விண்டோஸ் 8 சிஸ்டத்திலேயே தங்கி உள்ளவர்களைக் காட்டிலும் (6.29%), விண் 8.1 பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை (6.35%) அதிகரித்துள்ளது.

இவற்றிற்குப் பின்னால், மேக் ஓ.எஸ். பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 4.15% ஆக உள்ளது. இதனை அடுத்து, லினக்ஸ் 1.62% பங்கினைக் கொண்டுள்ளது.

(லங்கா சிறி)

No comments:

Post a Comment