Saturday, July 12, 2014

வல்லாரை தோசை

தேவையான பொருட்கள் :

புழுங்கல் அரிசி - 1 கப்

உளுந்து - கால் கப்

தினை - கால் கப்

வல்லாரை கீரை - 1 கப்

வெங்காயம் - 1

ப.மிளகாய் - 1

கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு



செய்முறை:

• வல்லாரைக் கீரையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• அரிசி, தினை மற்றும் உளுந்தை நான்கு மணி நேரம் ஊறவைத்து அரைக்கவும்.

• அரைத்த மாவில் வல்லாரைக் கீரை, உப்பு, வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலக்கவும்.

• தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் மாவை ஊற்றி தோசையாக சுட்டு எடுக்கவும்.

• மிகவும் சத்தான வல்லாரைக்கீரை தோசை ரெடி.

• குழந்தைகள் மற்றும் வளரும் பருவத்தினருக்கு மிகவும் நல்லது. வல்லாரைக்கீரை நல்ல ஞாபகசக்தியை அதிகரிக்கச் செய்யும். 

No comments:

Post a Comment