Friday, July 4, 2014

10 அடிப்படை யோக முத்திரைகளும்... அவைகளின் உடல் நல பயன்களும்... Basic Yoga Mudras & Their Health Benefits

உடல் எடை குறைப்பிற்கும், ஆரோக்கியத்திற்கும் உடற்பயிற்சியை விட யோகாவே சிறந்ததாக விளங்குகிறது. யோகா ஒரு பழமையான கலை என்று நம் இந்திய வேத புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முனிவர்களின் ஞானம் மற்றும் தற்போதைய நவீன விஞ்ஞானத்தின் கலவையான யோகா, மற்ற உடற்பயிற்சிகளை விட உங்களுக்கு பல வித நன்மைகளை அளிக்கும். யோகா என்றால் வெறும் ஆசனங்களும் இருக்கைகளும் மட்டுமல்ல. சிலருக்கு மட்டும் தெரிந்த முத்திரைகளும் கூட யோகாவில் உள்ளது. இந்த யோகாசன முத்திரைகளுக்கும் கூட நீங்கள் வியக்கும் படியான உடல்நல பயன்களை அளிக்கிறது.

தொப்பையைக் குறைக்க உதவும் யோகாசனங்கள்! ஒவ்வொரு யோகாசன முத்திரையும் தனித்துவம் பெற்றது. அதனால் அவைகளை சரியான வழியில் செய்திட வேண்டும். இந்த ஒவ்வொரு முத்திரைகளுக்கும் உள் அர்த்தங்கள் உள்ளது. உதாரணத்திற்கு, க்யான் முத்திரை பொதுவான ஒன்று. இந்த முத்திரை அறிவையும் ஒருமுனைப்படுதலையும் குறிக்கும். அதே போல் வாயு முத்திரை காற்றை குறிக்கும். உடலில் உள்ள காற்று சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை அது சமநிலைப்படுத்தும். 

ADVERTISEMENT தூக்கம் வராமல் அவதிப்படுபவர்களுக்கு 5 அட்டகாசமான யோகாசனங்கள்!!! அனைத்து யோகாசன முத்திரைகளும் கை அசைவுகளே. அவைகள் உங்களுக்கு ஆச்சரியம் அளிக்கக்கூடிய நன்மைகளை அளிக்கும். ஆனால் இந்த முத்திரைகளை நினைத்த மாத்திரத்தில் செய்யக்கூடாது. ஒவ்வொரு முத்திரையை செய்யவும் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரம் இருக்கிறது. குறிப்பிட்ட வகையில் அமர்வது, நிற்பது, படுப்பது போன்றவைகளும் இதில் அடங்கியுள்ளது. உடல் நல பயன்களை பெறுவதற்கு இந்த விசேஷ கை சைகைகளை பயன்படுத்துங்கள். அடிப்படையான யோகாசன முத்திரைகளையும் அதனால் உங்கள் உடலுக்கு ஏற்படும் பயன்களையும் இப்போது பார்க்கலாமா?

க்யான் முத்திரை அறிவையும் ஒருமுனைப்படுதலையும் குறிக்கும் மிக அடிப்படையான யோகாசன முத்திரை இதுவாகும். பத்மாசனா தோரணையில் அமர்ந்திருக்கும் போது காலையில் செய்ய வேண்டிய முத்திரை இது. இந்த முத்திரை உங்கள் ஒருமுனைப்படுதலை மேம்படுத்தி, தூக்கமின்மையை போக்கி, கோபத்தை கட்டுப்படுத்த உதவும்.

வாயு முத்திரை உடலில் உள்ள காற்று தனிமத்தை சமநிலைப்படுத்தவே இந்த முத்திரையாகும். உட்காரும் போது, நிற்கும் போது அல்லது படுக்கும் போது, அந்த நாளில் எந்நேரம் வேண்டுமானாலும் இதை செய்யலாம். உடலில் உள்ள அளவுக்கு அதிகமான காற்றை வெளியேற்றி, வாயுவினால் ஏற்படும் நெஞ்சு வழியை குறைக்க இது உதவும்.

அக்னி முத்திரை உடலில் உள்ள நெருப்பு தனிமத்தை சமநிலைப்படுத்தவே இந்த முத்திரை. விடியற்காலையில் வெறும் வயிற்றில் இந்த முத்திரையை செய்யலாம். உடல் எடையை குறைப்பதற்கு இந்த முத்திரை; இது கொழுப்புகளை குறைத்து செரிமான செயல்பாட்டை துரிதப்படுத்தும்.

வருண முத்திரை இந்த யோகாசன முத்திரை உடலில் உள்ள நீர் தனிமத்தை சமநிலைப்படுத்துவதற்காக செய்வதாகும். மேலும் உங்கள் அழகை மேம்படுத்த இந்த முத்திரை உதவும். உங்கள் உடலில் உள்ள நீரோட்டம் நன்றாக வைப்பதாலும், சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருப்பதாலும் உங்கள் சருமம் மின்னிடும்.

பிராண முத்திரை வாழ்க்கையை குறிக்கும் முத்திரை இது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யக்கூடிய முத்திரை இது. இந்த யோகாசன முத்திரை உங்கள் செரிமான அமைப்பை மேம்படுத்தி, உங்கள் கண்பார்வையின் கூர்மையை அதிகரித்து, சோர்வை எதிர்த்து ஆற்றல் திறனுடன் வைத்திருக்க உதவும்.

ப்ரித்வி முத்திரை அண்டத்தில் உள்ள உலக தனிமத்தை உங்கள் உடலுக்குள் ஊக்குவிக்கவே இந்த முத்திரை. இந்த முத்திரையினால் கிடைக்கும் உடல்நல பயன்கள் - இரத்த ஓட்டம் மேம்படும், பொறுமை அதிகரிக்கும், தசைகள் மற்றும் எலும்புகள் வலுவடையும்.

சூன்ய முத்திரை சைபர் அல்லது சூன்ய முத்திரை என்பது உங்கள் காதுகளுக்கானது. இந்த முத்திரை உங்கள் காது வலிகளை போக்கும். மேலும் வயது மற்றும் நோயினால் காது கேட்கும் திறன் குறைபவர்களுக்கும் கூட இது உதவும்.

சூரிய முத்திரை சூரியனின் ஆற்றல் திறனை அனுசரிப்பதே சூரிய முத்திரையின் அடிப்படையாகும். சூரியனின் ஆற்றல் திறனை பெறுவதற்கு இந்த முத்திரையை விடியற்காலையில் செய்ய வேண்டும்.

லிங்கா முத்திரை இந்த முத்திரை ஆண்களின் விரைக்குறியை குறிக்கும். அதனால் தான் என்னவோ உடலில் வெப்பத்தை உருவாக்குகிறது இது. இந்த முத்திரை உங்கள் ஆண்மையை அதிகரித்து, சளி சம்பந்தப்பட்ட உடல்நல பிரச்சனைகளை போக்கும்.

அபான் முத்திரை பல்துறை முத்திரையான அனேகமாக அனைவருக்குமே பயனை அளிக்கும். உடலில் உள்ள நச்சுத்தன்மை கலந்த நீரை இந்த அபான் முத்திரை சுத்தப்படுத்தும். சிறுநீரக கோளாறுகளை கையாள உதவும் இம்முத்திரை. அதே போல் மலம் கழித்தலையும் சீராக்கும்.

(tamil.boldsky.com)








No comments:

Post a Comment