Wednesday, June 18, 2014

கடும் பார்வை இழப்பிற்கு உள்ளானவர்களுக்கு உதவும் ஸ்மார்ட் கண்ணாடிகள் smart glasses

கடும் பார்வை இழப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் முகமாக ஸ்மார்ட் கண்ணாடிகளை உருவாக்கியுள்ளதாக பிரித்தானிய ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உரிமை கோரியுள்ளனர்.

இந்த ஸ்மார்ட் கண்ணாடிகளானது அவற்றை அணிந்துள்ளவர்களுக்கு அண்மையிலுள்ள ஆட்கள் மற்றும் பொருட்களின் விரிவான பிரதிமைகளை தோன்றச் செய்து சுற்றுச்சூழல் தொடர்பில் மிகவும் தெளிவான காட்சிப் புலத்தைத் தருகிறது.

இந்தக் கண்ணாடிகள் சிலருக்கு தமது வழிகாட்டுவதற்கான நாய்களை முதன் முதலாக பார்க்கும் வாய்ப்பைத் தருகிறது.

பிரித்தானியாவில் மோசமாக பார்வை பாதிக்கப்பட்டு தமது அன்றாட கடமைகளை மேற்கொள்ள முடியாத நிலையில் சுமார் இரு மில்லியன் பேர் உள்ளனர்.

விசேட முப்பரிமாண புகைப்படக் கருவியுடனான புதிய ஸ்மார்ட் கண்ணாடிகளானது விழித்திரையெங்கும் தோன்றும் கறுப்புப் புள்ளிகள் பார்வை இழப்பிற்கு வழி வகை செய்கின்றன.

இந்நிலையில் மேற்படி ஸ்மார்ட் கண்ணாடியின் மூலம் பிரதிபலிக்கும் விம்பங்கள் அருகிலுள்ள பொருட்களின் தெளிவான பிரகாசமான விரிவுபடுத்தப்பட்ட பிரதிமைகளை உருவாக்குகின்றன.

இந்தக் கண்ணாடிகள் உடனுக்குடன் இடத்தை அடையாளங் காணும் முறைமையை உள்ளடக்கியுள்ளன.

No comments:

Post a Comment