Saturday, October 18, 2014

ஆன்டிராய்டு போனை சூப்பரா யூஸ் பண்ணணுமா? இதோ சூப்பர் டிப்ஸ் android_use_001



பலரும் ஸ்மார்ட் போனில் உள்ள சில சிறப்பம்சங்களை தெரிந்து கொள்ளாமலே போனை பயன்படுத்தி வருகின்றனர்.

நீங்கள் ஆன்டிராய்டு ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறீர்கள் என்றால் இந்த வசதிகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அவற்றை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
கஸ்டம் காலர் ரிங்டோன்
உங்க கான்டாக்ட் வரிசையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேற ரிங்டோன் வைத்து கொள்ளலாம்.
பிடித்த விடங்களை சேமிக்க
உங்களுக்கு பிடித்த விடயங்களை போல்டரில் தனியாக வைத்து கொள்ள முடியும், இதற்கு ஹோம் ஸ்கிரீனை அழுத்தி பிடித்தால் வேலை முடிந்தது.
பவர் ஸ்ட்ரிப்
ஆன்டிராய்டு பவர் ஸ்ட்ரிப் உங்க ஸ்மார்ட் போனில் அதிக பேட்டரியை பயன்படுத்தும் ஆப்ஸ்களின் இணைப்புகளை துண்டித்து விடும்.
கால் ஸ்கிரீனிங்
ஆன்டிராய்டு போனில் ஸ்கிரீனிங் செய்ய வேண்டிய எண்ணை தெரிவு செய்து மெனு - ஆப்ஷன்ஸ் சென்றால் அந்த எண்ணில் இருந்து வரும் அழைப்புகள் தானாக வாய்ஸ்மெயில் ஆகிவிடும்.
திகதியை அறிய
ஆன்டிராய்டு போனின் நோட்டிபிக்கேஷன் பகுதின் இடது புறத்தில் அழுத்தினால் தேதியை தெரிந்து கொள்ள முடியும்.
லைவ் வால் பேப்பர்கள்
ஆன்டிராய்டில் நல்ல வரவேற்பை பெற்ற லைவ் வால் பேப்பர்கள் உங்க போனுக்கு நல்ல லுக்கை கொடுக்கும்.
டாஸ்க் கில்லர்
பேட்டரியை பாதுகாக்க டாஸ்க்களை அழிக்கும் பணியை இது செய்கிறது. அப்போது உங்க மொபைலில் அலாரமும் அழிந்து விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சூமிங் ஆப்ஷன்
ஆன்டிராய்டில் சூமிங் ஆப்ஷன் பற்றி உங்களுக்கே தெரியும் ரொம்ப எளிமையாக அமைக்கப்பட்டுள்ளது.
வாய்ஸ் டெஸ்ட்
மெனு - மோர் சென்று இணையத்தில் தேவையான பக்கங்களை குறிப்பிட்டு தேட முடியும். ஆன்டிராய்டில் வாய்ஸ் டெக்ஸ்டிங் வசதியும் உள்ளது.
நேவிகேஷன் ஷார்ட்க்ட்
இது உங்களுக்கு அப்டேட்டான கூகுள் மேப்ஸ்களை எளிதாக நேவிகேட் செய்யும்.
பிரவுஸர்
ஆன்டிராய்டு பிரவுஸரில் பான்ட்களின் அளவை உங்களுக்கு ஏற்ற வகையில் அமைத்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment