Thursday, August 21, 2014

ZTE அறிமுகம் செய்யும் Nubia 5S Mini ஸ்மார்ட் கைப்பேசி

ZTE நிறுவனம் Nubia 5S Mini எனும் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.


முதன் முறையாக அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்படவுள்ள இக்கைப்பேசியானது 279.99 டொலர்கள் பெறுமதி உடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

4.7 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்ட இக்கைப்பேசியானது 1.2GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Quad Core Qualcomm Snapdragon 400 Processor, 2GB RAM, 16GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் கொண்டுள்ளது.

மேலும் Android 4.3 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு செயற்படக்கூடிய இக்கைப்பேசியில் 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment