Friday, August 1, 2014

பற்சிகிச்சைத் துறையில் லேசரின் பயன்பாடு

பற்களில், இரண்டு விதமான நோய்களே தோன்றுகின்றன. ஒன்று, பற்சொத்தை. மற்றையது, பற்களின் ஆதாரமாக விளங்கும் ஈறு, பல் வேர்கள் மற்றும் தாடை எலும்பில் ஏற்படும் கோளாறுகள். இவற்றின் அடிப்படையிலேயே பற்களில் நோய்கள் தோன்றுகின்றன.


பொதுவாகவே பற்களில் ஏற்படும் குறைபாடுகளைப் பலரும் சட்டை செய்வதில்லை. ஒரு பல் விழுந்தாலும் அந்த வெற்றிடம் கட்டாயமாக, ஆறு மாதங்களுக்குள் நிரப்பப்படவேண்டும். இல்லாவிட்டால், பக்கவாட்டில் இருக்கும் பற்கள் ஒவ்வொன்றாகச் சரிய ஆரம்பித்துவிடும்.

சிலருக்கு, குறிப்பிட்ட பல்லில் வலி எடுப்பதால், சாப்பிடும்போது அந்தப் பற்களைப் பயன்படுத்தாதவாறு பார்த்துக்கொள்வார்கள். அது அப்போதைக்கு அவர்களுக்கு நிவாரணம் அளிப்பதாக இருந்தாலும், நாளடைவில், அந்தப் பல் பயனே இல்லாமல் போய்விடும். எனவே, பற்களில் பிரச்சினைகள் தோன்றும் பட்சத்தில் அவற்றுக்கு உடனடியாக மருத்துவத் தீர்வைப் பெற்றுக்கொண்டால், நீண்ட காலத்திற்கு பற்கள் நிலைத்திருக்கும்.

பற்சிகிச்சைகளைப் பொறுத்தவரையில்,

அன்றாட உணவில், மாச்சத்து, இனிப்பு என்பன அதிகமாகச் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன. இவை எளிதில் பற்களில் தங்கிவிடுகின்றன. உணவைச் சீரணிக்கச் செய்யும் பக்டீரியாக்கள் நமது பற்களிலும் காணப்படும். இவை, அதிக நேரம் பற்களில் தங்கும் உணவை, பற் களில் வைத்தே சீரணிக்கச் செய்கின்றன. இதனால் பற்சொத்தை ஏற்படுகிறது. அடுத்து, சிலரது உமிழ்நீர் கெட்டித்தன்மை உடையதாக இருக்கும். இதனால், மாச்சத்து, இனிப்பு போன்றன பற்களின் உட்பகுதியிலேயே அதிக நேரம் தேக்கி வைக்கப்படுவதாலும் பற்சொத்தை உண்டாகிறது. புகைத்தலால் உமிழ்நீர் குறைவாகச் சுரப்பதாலும் பற்சொத்தைக்கு வழி உண்டாகின்றது. இவையனைத்துக்கும் மேலாக, நாம் தெரிவு செய்யும் பற்தூரிகை, பற்பசை, நாம் பல் துலக்கும் முறை என்பனவும் முக்கிய காரணங்களாக அமைகின்றன.

நம் வாயில் உண்டாகும் உமிழ்நீர், கீழ்த் தாடையின் முற்பகுதியில் அதிக நேரம் தங்கி நிற்கும். இதன்போது, உமிழ்நீரில் காணப்படும் கல்ஷியம் குறிப்பிட்ட பகுதியில் படிந்து விடும். அளவுக்கதிகமாக இது தங்கி விடுவதாலும், சரியாகச் சுத்தம் செய்யப்படாமையாலும் அப்பகுதியில் காரை ஏற்படுகின்றது. அதைத்தொடர்ந்து காரை விலகி, பல்லின் வேர்கள் பாதிக்கப்படுகின்றன. இறுதியாக, தாடை எலும்பும் பாதிக்கப்படுகின்றன.

பற்களுக்கான சிகிச்சை முறைகள், நாள் தோறும் மாற்றம் பெற்று வருகின்றன. தற்போதைய அதிநவீன சிகிச்சையாக லேசர் சிகிச்சை யைக் குறிப்பிடலாம். இந்த இந்தப் பிரச்சினைகளுக்குத்தான் என்றில்லாமல், பற்களில் ஏற்படக்கூடிய அனைத்துப் பிரச்சினைகளுக்கும் லேசர் மூலமாகவே சிகிச்சையளிக்க முடியும். இந்த சிகிச்சையில் வலி இருக்காது. இரத்த இழப்பு இருக்காது. கதிர்வீச்சைத் தவிர வேறெந்தத் தொடர்பும் பல்லுக்கும் உபகரணத்துக்கும் இருக்காது என்பதால் நோய்த்தொற்றும் இருக்காது. சிகிச்சையின் பின்னான புண்களும் விரைவில் ஆறிவிடும். சிகிச்சையின்போதே இரத்தமும் உறையச் செய்யப்படும். இதனால், மருத்துவருக்கும் பாதிக்கப்பட்ட இடத்தை இரத்தக் கறை, அதிக உமிழ்நீர் இன்றித் தெளிவாகப் பார்க்கலாம். மிக முக்கியமாக, பற்சிகிச்சைக்கு வரும்போது வாயில் ஊசி குத்துவார்களே என்று பயமும் இப்போது இல்லை. எந்தப் பிரச்சினைக்கும் ஒரே நாளில் சிகிச்சையை முடித்துக்கொண்டும் வீடு திரும்பிவிடலாம்.

தினசரி இருவேளை மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் வரை பல் துலக்குவதைப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் கீழுமாகவும் பின்னர் நாற்பத்தைந்து பாகை சாய்வாகவும், பற்களும் ஈறும் இணையும் இடத்தில் படுமாறு துலக்க வேண்டும். பொருத்தமான பற் தூரிகையைத் தெரிவுசெய்வதும் அவசியம். முப்பது நாட்களுக்கு ஒரு முறை பற்தூரிகையை மாற்ற வேண்டும். நொறுக்குத் தீனிக்குப் பின் வாய் கொப்புளிப்பதைக் கைக்கொள்ளவேண்டும்.

பற்கள் நம் அழகை மட்டுமன்றி, ஆரோக்கியத்தையும், தன்னம்பிக்கையையும் வெளிப்படுத்துகின்றன. நாம் வாழ்நாள் முழுவதும் உணவு உண்ண ஆதாரமாக இருப்பவையும் பற்களே. ஆகையால், பற்களை முறையாகப் பராமரிப்பது அவசியம்.

(virakesari.lk)

No comments:

Post a Comment