Friday, August 1, 2014

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் எலுமிச்சை

ஆண்டு முழு­வதும் கிடைக்கும் பழம் எலு­மிச்சை. உண­வா­கவும், மருந்­தா­கவும் மட்­டு­மின்றி மங்­கள பொரு­ளா­கவும் எலு­மிச்சை திகழ்­கி­றது. உலகம் முழு­வதும் எலு­மிச்­சையின் மருத்­துவ பண்­பு­களை அறிந்து அதி­க­ளவில் பயன்­ப­டுத்தி வரு­கின்­றனர். சாத்­துக்­குடி, ஓரஞ்சு, நாரங்காய் ஆகி­ய­வையும் எலு­மிச்சை இனத்தை சேர்ந்­த­வையே. இதன் இலை­களில் தைலச்­சு­ரப்­பிகள் உள்­ளன. 3ஆவது ஆண்டில் பலன் தரும் எலு­மிச்சை 30 முதல் 50 ஆண்­டுகள் வரை மகசூல் தரும். செழிப்­பான பூமி என்றால் 100 ஆண்­டுகள் வரை நீடித்து வாழும்.


நல்ல நில­மாக இருந்தால் ஒரு மரம் ஆண்­டிற்கு 2ஆயிரம் பழங்கள் வரை கொடுக்கும். இப்­பழம் ஊறு­கா­யா­கவும், களைப்பை உட­ன­டி­யாக நீக்கி புத்­து­ணர்ச்சி தரும் பழச்­சா­றா­கவும் பயன்­ப­டு­கி­றது. இது­த­விர மங்­கள பொரு­ளா­கவும், திருஷ்டி பரி­கா­ர­மா­கவும் பயன்­படும் எலு­மிச்­சையை சிலர் மாந்­தி­ரீ­கத்­திற்கும் பயன்­ப­டுத்­து­கின்­றனர். பெரி­ய­வர்­களை மரி­யாதை செய்­யவும் இப்­பழம் வழங்­கப்­ப­டு­வ­துடன், தெய்­வங்­க­ளுக்கு மாலை­யா­கவும் அணி­விக்­கப்­ப­டு­கி­றது.

எலு­மிச்சை பழத்தின் சத்­துக்கள்

விட்­டமின் ஏ 7 மில்­லி­கிராம், விட்­டமின் பி.-ஜே 6 மி.கி, விட்­டமின் சி 16 மி.கி, சுண்­ணாம்பு சத்து 25 மி.கி, இரும்­புச்­சத்து 1 மி.கி, கலோரி அளவு 17 ஆகும். இது­த­விர செம்புச் சத்து அதிகம் உள்­ளதால் உட­லுக்கு பல நன்­மை­களை தரு­கி­றது. எலு­மிச்சை சாற்றை பித்­தளை பாத்­தி­ரத்தின் மீது தேய்த்தால் அது செம்பு நிற­மாக மாறு­வதை காணலாம். மேலும் பொஸ்­பரஸ் (0.2) கார்­போ­ஹை­தரேட் எனப்­படும் மாவுச்­சத்து (10.9 மி.கி), தாவர உப்­புச்­சத்து (0.1), புரதம் (1.5), கொழுப்புச் சத்து (1), தண்ணீர் (84.6) என்ற அளவில் உள்­ளன.

விட்­டமின் சி உள்­ளதால் அதன் சாற்றை அருந்­தும்­போது தொற்­றுநோய் அணு­காது. இரத்­தத்தில் புதி­ய­தாக உயி­ர­ணுக்கள் உற்­பத்தி செய்­யப்­ப­டு­வ­துடன் தேவைப்­ப­டு­கிற பிராண சக்­தியும் இயற்­கை­யாக கிடைக்கும். விளை­யாட்டு வீரர்கள் தங்­க­ளது களைப்பை உட­ன­டி­யாக தீர்க்க எலு­மிச்சை சாறு உத­வு­கி­றது.

54 வகை­யான நோய்கள்

எலு­மிச்சை 54 வகை­யான நோய்­க­ளி­லி­ருந்து நம்மை காக்­கி­றது. ஈர்ப்புண், நாக்­குப்புண், ஈளை, இருமல், சுக­பே­தியை நிறுத்­துதல், வாத நோய், வயிற்று வலி, கர்ப்­பி­ணிகள் இரத்­த­பேதி, வயிற்று கடுப்பு, சொரி சிரங்கு, பித்­த­வாந்தி, இரு­பக்க தலை­வலி, பேன், பொடுகு, பல்­வலி, பித்த மயக்கம், காக்கா வலிப்பு, தேள், தேனீ விஷம் நீக்­குதல், முகப்­பரு, வயிற்று கிருமி, தொண்டை வலி, தொண்டை வறட்சி, வயிற்று இரைச்சல், வாய்க்­க­சப்பு, மலச்­சிக்கல், நீர்க்­க­டுப்பு, மஞ்சள் காமாலை, கல்­லீரல் நோய்கள், மூட்­டு­வலி, வெட்டை நோய் என ஒவ்­வொரு நோய்­க­ளுக்கும் மருந்­தாக பயன்­ப­டு­கி­றது.

விஷக்­கதிர் தாக்­கு­தலை தடுக்கும்

எலு­மிச்சை சாற்றை பிழிந்து விட்டு தூர எறியும் தோலிலும் அரிய சக்­திகள் உள்­ளன. அமெ­ரிக்­கர்கள் எலு­மிச்சம் பழத்­தோ­லி­லிருந்து பயோ பிளோபின் என்ற மருந்தை தயா­ரிக்­கின்­றனர். அணு­குண்டு, ஜல­வாயுக் குண்­டு­களை வெடித்து அதி­லி­ருந்து உண்­டாகும் விஷ­க்கதிர் இயக்­கத்தை எலி­களின் மீது தாக்­கும்­படி செய்து பரி­சோ­தித்­ததில் பயோ­பி­ளோபின் மருந்தை உட்­கொண்ட எலிகள் கதி­ரி­யக்­கத்­தினால் பாதிக்­கப்­ப­ட­வில்லை என்­பதை கண்­ட­றிந்­தனர். தற்­போது அணு­குண்டு சோதனை நடத்தும் நாடுகள் பயோ பிளோபின் மருந்தை உட்­கொண்டு கதி­ரி­யக்­கத்­தி­லி­ருந்து தப்­பு­கின்­றனர்.

லெமன் பெக்டின்

அனைத்து பழங்­க­ளிலும் பெக்டின் என்ற சத்­துப்­பொருள் உள்­ளன. எலு­மிச்சம் பழத்­தி­லி­ருந்து பிரிக்­கப்­படும் லெமன் பெக்டின் நீரி­ழிவு நோயா­ளிகள் உடலில் காயம் ஏற்­பட்டால் அதனை சரி செய்ய பயன்­ப­டு­கி­றது.

நீர­ழிவு நோயா­ளிகள் காயம் அடைந்தால் அந்த இடத்­தி­லி­ருந்து அதி­க­ளவு இரத்தம் வெளி­யேறி உயி­ருக்கே ஆபத்து ஏற்­படும். இந்த வகை இரத்­த­போக்கை நிறுத்த லெமன் ­பெக்­டினை பயன்­ப­டுத்­து­கின்­றனர். இது இழந்த இரத்­தத்­திற்கு பதில் புதிய இரத்தம் உற்பத்தியாக பயன்படுகிறது.

(virakesari.lk)

No comments:

Post a Comment