Thursday, October 16, 2014

பெண்களின் கரு முட்டையை பாதுகாக்கும் பேஸ்புக் நிறுவனம் - women-not-feel-pressurised-freezing-eggs-bosses-equalities-minister-jo-swinson-warns

பேஸ்புக் நிறுவனத்தில் கடமையாற்றும் இள வயதுடைய பெண்களின் கரு முட்டையை அதி குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைத்து பாதுகாக்கும் திட்டமொன்றை அந்நிறுவனம் நடைமுறைப்படுத்தி வருகிறது.


பெண்கள் திருமணம் செய்து இள வயதிலேயே பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வதால் தொழில் ரீதியாக பின்னடைவை சந்திப்பதாகவும் மேற்படிப்பை இடைநிறுத்தி விடுவதாகவும் ஆய்வுகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குழந்தைப் பேற்றினை தள்ளிப்போட விரும்பும் குறித்த நிறுவனத்தில் கடமையாற்றும் பெண்கள் ஆரோக்கியமான கரு முட்டைகளை அதிகூடிய பாதுகாப்பு மிக்க குளிரூட்டியில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

அவர்கள் தொழில் ரீதியான முன்னேற்றத்தினையும் கல்வித் திறனையும் பெற்றுக்கொண்ட பின்னர் அந்த கரு முட்டையினைப் பயன்படுத்தி குழந்தைப் பேற்றினை உருவாக்கிக் கொள்ளலாம்.

இந்தத் திட்டத்தை அமெரிக்காவின் பல்வேறு நிறுவனங்கள் செயற்படுத்தி வருகின்ற நிலையில் பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கும் இதனை நடைமுறைப்படுத்தியுள்ளது.

சிலிக்கொன் வெலி என்று சொல்லப்படுகின்ற மிகப் பிரபலமான அமெரிக்க நிறுவனங்கள் அமைந்துள்ள இடங்களில் இம்முறை ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

கரு முட்டையை பாதுகாப்பாக சேமிக்க விரும்பும் பெண்களுக்கு குறிப்பிட்ட சில நிறுவனங்கள் 12 500 யூரோவை செலுத்துகின்றன.

எதிர்வரும் 2015 ஆம் ஆண்டுமுதல் அப்பிள் நிறுவனமும் இத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment