Saturday, July 26, 2014

பிரியாணி சாப்பிட்டதும் ஐஸ் வாட்டர் குடிக்காதீங்க சார்.. நெஞ்சு வலி வந்துரும்! Drinking cool water after food leads to Heart attack

தண்ணீர் குடித்தால் உடலுக்கு நல்லது அப்படி இப்படி என்று பல்வேறு வகையான நன்மைகள்தான் நமக்குத் தெரியும்.

வாட்டர் தெரபி என்னும் தண்ணீரால் உண்டாகும் நன்மைகளால் உடல் பாதிப்புகள் கூட விலகிவிடும் என்பதுதான் மிகவும் பிரபலம்.


ஆனால், தண்ணீர் குடித்தால் மாரடைப்பு ஏற்படும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியவில்லைதானே! ஆனால், அதுதான் உண்மை.

குளிர்ந்த நீர் குடிக்காதீர்: ஆம், குளிர்ந்த நீரை மடக், மடக்கென்று உள்ளே தள்ளுதல் மிகவும் தவறான ஒரு பழக்கமாகும். அதுவும் சாப்பிட்டபின்னர் குளிர்ந்த நீர் குடித்தல் உயிருக்கே உலை வைக்கும் ஒன்றாகும்.

சூடான தேநீர் நல்லது: சீன மற்றும் ஜப்பான் மக்கள் தங்களின் உணவிற்கு பிறகு குளிர்ந்த தண்ணீரை விடுத்து சூடான தேநீர் அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இப்பழக்கத்தை நாமும் பின்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.

மெதுவாகும் செரிமானம்: சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீர் குடிப்பதனால் , நம் உணவில் உட்கொண்ட எண்ணெய் பொருட்கள் திடப்பொருளாக மாறி செரிமானத்தை மெதுவாக்கிவிடும். திடப்பொருளாக மாறிய கலவை நம் வயிற்றில் இருக்கும் அமிலத்தோடு வினைபுரியும். இது திட உணவை விட வேகமாக உடைந்து குடலால் உறிஞ்சப்படும்.

குடலை கெடுக்கும் கொழுப்பு: இது நம் குடலில் அணிதிரண்டு அப்படியே நின்றுவிடும். மிக விரைவில், இது கொழுப்புகளாக மாறி புற்றுநோய்க்கும், மாரடைப்புக்கும் வழிவகுக்கும். ஆகவே உணவிற்கு பிறகு சூடான தண்ணீர்தான் நல்லது.

தூக்கதிலேயே மாரடைப்பு: சாப்பிட்ட பின்பு குளிர்ந்த நீர் குடித்துவிட்டு படுத்தால் செரிமானம் சரியாக நடைபெறாமல் நெஞ்சடைத்து தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்படலாம். மாரடைப்பின் முதல் அறிகுறி இடது கையில் ஏற்படும் கடுமையான வலி ஆகும். தாடையில் தீவிர வலி ஏற்பட்டாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

குமட்டலும் மாரடைப்பின் அறிகுறிதான்: மாரடைப்பு வரும்போது பொதுவாக நெஞ்சு வலி ஏற்படாது. குமட்டல் மற்றும் கடுமையான வியர்வையே மாரடைப்பு ஏற்பட பொதுவான அறிகுறிகள் ஆகும். 60% சதவீத மக்கள் தூக்கத்தில் மாரடைப்பு ஏற்படும்போது அவர்களால் எழுந்துகொள்ள முடியாது.

உறக்கத்திலேயே எமன்: உறக்கத்திலேயே இறந்துவிடுவார்கள். தாடை வலி ஏற்பட்டவர்கள் மட்டுமே அயர்ந்த தூக்கத்திலிருந்து எழுந்து கொள்ள முடியும். ஆகவே எப்பொழுதும் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். ஆதலால், குளிர்ந்த நீரைக் குடிக்காமல் சாப்பிட்டவுடன் சூடான நீரைக் குடித்து வாழ்நாளை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

(oneindia web)






No comments:

Post a Comment