Tuesday, July 22, 2014

62 வயது மூதாட்டியுடன் 9 வயது சிறுவன் டும்..டும்..டும்… Second Wedding For 9-year-old Boy & His 61-year-old Wife




தென்னாபிரிக்காவில் உள்ள ட்ஷ்வான் கிராமத்தை சேர்ந்த 9 வயது சிறுவன் சானியே மசிலேலா. சமீபத்தில் இவன் 62 வயது பெண்ணை திருமணம் செய்தான்.



அப்பெண்ணின் பெயர் ஹெலன் ஷபாங்கு.  தன்னை விட 53 வயது மூத்தவரான அவருடன் குடும்பம் நடத்த சிறுவன் சானியே விரும்பி திருமணம் செய்யவில்லை.  அவனது மத சம்பிரதாயப்படியும், முன்னோர்களின் பழக்க வழக்கப்படியும் அவரை திருமணம் செய்து கொண்டான்.


இது அவனுக்கு 2–வது திருமணமாகும்.     ஏற்கனவே கடந்த ஆண்டு அதாவது தனது 8 வயதில் 61 வயது ஹெலன் என்ற பெண்ணை திருமணம் செய்து இருந்தான்.


தற்போது இவன் மணந்துள்ள ஹெலனுக்கு ஏற்கனவே திருமணமாகி 5 குழந்தைகள் உள்ளன. இவரது முதல் கணவர் பெயர் ஆல்பிரட் ஷபான்கு (67).
சிறுவன் சானியேவின் குடும்பத்தினர் திருமணத்தின்போது மணமகளுக்கு ரூ. 5 ஆயிரம் பரிசு வழங்கினர். திருமண செலவுக்கு ரூ. 10 ஆயிரம் கொடுத்தனர். திருமண சடங்குகள்  இணைய தளத்தில் வீடியோ காட்சியாக ஒளிபரப்பட்டன.
அப்போது அவன் தனது மனைவி ஹெலனுக்கு முத்தமிடுவதும், உணவு சாப்பிட்ட படி தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ஆடிப்பாடி மகிழ்ந்த காட்சிகளும் இடம் பெற்றிருந்தன.

No comments:

Post a Comment