Thursday, August 18, 2016

இரவு உணவுக்குப் பின் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா ? Is eating bananas after meals good for health


இரவு உணவினை அதிகமாக சாப்பிட்டுவிட்டால், அந்த உணவு செரிமானம் அடைய வேண்டும் என்பதற்காக வாழைப்பழத்தை சாப்பிட்டு தூங்கச்செல்வார்கள். மேலும், மலச்சிக்கல் பிரச்சனைக்கும் வாழைப்பழம் தான் சிறந்தது என்று அனைத்து மருத்துவர்களும் பரிந்துரை செய்கிறார்கள்.

இரவு உணவிற்குப் பின் எந்த பழமும் சாப்பிடுவது நல்லது கிடையாது. அதிலும் குறிப்பாக வாழைப்பழம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு உகந்தது இல்லை.

ஏனென்றால், அதில் உள்ள Fructose என்ற சர்க்கரை சத்து கொழுப்பாக மாறி நமது உடலில் நிரந்தரமாக தங்கி விடும். இதன் காரணமாக உடலில் கலோரி அதிகமாகும்.

உடல் எடை அதிகரிக்கும். ஒரு சிலர் இரவு உணவிற்குப்பின் வாழைப்பழம் சாப்பிடுவதை பழக்கமாக கொண்டவர்கள் சாப்பிட்ட உடனே வாழைப்பழம் சாப்பிடக்கூடாது. 15 நிமிடங்கள் கழித்து சாப்பிடலாம்.

இரவு உணவிற்குப் பின் வாழைப்பழம் சாப்பிடுவதால், சாப்பிட்ட உணவு விரைவாக செரிமானம் ஆகும், காலைக்கடன்களை எந்தவித சிரமமும் இல்லாமல் செய்ய முடியும் என்று கூறுவதில் ஓரளவிற்கு உண்மை இருக்கிறது.

வயிற்று உபாதை காரணமாக காலைக்கடன்களை முடிக்க சிரமப்படுபவர்கள் இரவு உணவிற்குப்பின் வாழைப்பழம் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

அதற்கு பதிலாக நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

12 வயது வரை குழந்தைகளுக்கு இரவில் வாழைப்பழம் கொடுக்கலாம். இவர்கள் காலை, மாலை என எந்த நேரத்திலும் இதை சாப்பிடலாம். தொடர்ந்து இரவு நேரங்களில் வாழைப்பழம் சாப்பிடுவதால் ஒருசில குழந்தைகளுக்கு சளித்தொல்லை ஏற்படும்.

வயதானவர்களும் நீரிழிவு உள்ளவர்களும் சாப்பிடக்கூடாது. விளையாட்டு வீரர்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்பவர்கள் இரவு உணவிற்குப்பின் வாழைப்பழம் சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.

இதன் காரணமாக இவர்களுக்கு உடலில் கலோரி அளவு அதிகரிக்கும். எனவே, இவர்களால் களைப்படையாமல் நீண்ட நேரம் உடற்பயிற்சிகள் செய்ய முடியும்.

Friday, August 12, 2016

’விக்கல்’ நிற்க என்ன செய்யலாம்?


விக்கல் எப்போது வரும் என்றே தெரியாது. சாப்பிட்டு கொண்டிருக்கும் போது திடீரென விக்கல் எடுக்கும், சில சமயங்களில் இது ஆபத்தில் கூட முடியும், மூச்சுக் குழாயில் உணவு சென்று அடைத்துக் கொண்டால் உயிருக்கே ஆபத்தாகும் வாய்ப்புகள் உண்டு.

பெரியவர்கள் விக்கல் எடுத்தால், யாரோ நினைக்கின்றனர் என்று கூறுவர். ஆனால், விக்கல் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. குறிப்பாக இரைப்பையில் அமிலத்தன்மை அதிகரிப்பது தான் இதற்கான முக்கியக் காரணம்.

உணவுக்குழாய்க்கும் இரைப்பைக்கும் இடையே ஒரு கதவு இருக்கிறது. அக்கதவு உணவு உட்கொள்ளும்போது திறந்தும் மற்ற நேரங்களில் மூடியும் இருக்கும். சிலருக்கு அக்கதவு எப்போதும் திறந்தே இருப்பதால் இரைப்பையில் இருக்கும் அமிலம் எதிர்த்திசையில் உணவுக்குழாய்க்கு செல்கிறது.

உணவுக்குழாயை சுற்றியுள்ள சதைகளில் அந்த அமிலம் ஏற்படுத்தும் தாக்கத்தால் விக்கல் ஏற்படுகிறது. சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு, சிறுநீர் வழியே வெளியேறாத நச்சுக்கிருமிகள் ரத்தத்தில் கலந்து விடுவதாலும் விக்கல் ஏற்படும். நரம்பு மண்டலக் கோளாறு மற்றும் நுரையீரலில் ஏற்படும் கிருமித் தொற்று ஆகியவற்றாலும் விக்கல் ஏற்படும்.

இதனை நிறுத்த சில வழிகள் உண்டு:

சர்க்கரை சாப்பிட்டால் விக்கல் நின்று போகும்.

பாலிதீன் பைக்குள் சில நொடிகள் சுவாசிப்பதும் இதற்குத் தீர்வாக அமையும்.

ஏனெனில், பாலிதீன் பைக்குள் இருக்கிற ஆக்சிஜன் சிறிது நேரத்தில் தீர்ந்துபோய் கார்பன் டை ஆக்ஸைடையே சுவாசிக்க நேரும்போது விக்கல் நிற்கும்.

இதுபோன்ற முதலுதவிகளுக்கு விக்கல் கட்டுப்படவில்லையென்றால் மருத்துவத் தீர்வை நாடுவது நல்லது. பொதுவாகவே நம் உணவு முறையில் அமிலத்தன்மை அதிகம் உள்ள உணவுப்பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

Saturday, December 19, 2015

நாள் முழுவதும் உற்சாகம் தரும் உணவுகள் Health Food

நாம் ஆரோக்கிய உணவுகளை எடுத்துக்கொள்வதோடு மாத்திரமின்றி உடலுக்கும், மனதுக்கும் உற்சாகம் தரும் உணவுகளையும் தெரிவு செய்து சாப்பிட வேண்டும்.


சிவப்பரிசி - இது நம் மனதை அமைதியடைய வைத்து, கற்கும் திறனும் ஞாபக சக்தியும் மேம்பட உதவுகிறது. மன திருப்தியையும் நிறைவான தூக்கத்தையும் தரும்.

மீன் - நம்மை சுறுசுறுப்படையச் செய்து முறையான நரம்பு மண்டல செயல்பாட்டை அதிகரிக்கச் செய்கிறது. மீனில் உள்ள செலினியம் எனும் தாதுப் பொருள் ஆக்சிஜனேற்றத்துக்கு முக்கியம். ஆக்சிஜனேற்றம் மூளையின் செயல்பாட்டுக்கு உதவும்.

வாழைப்பழம் - தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் மூளை சுறுசுறுப்பாகும். கடின உழைப்பால் ஏற்படும் உடல் சோர்வு உடனடியாக நீங்கி மீண்டும் வேலையை தொடர உதவும்.

இது தவிர, மூளையின் இரத்த நாளங்கள் சேதமடையாமல் காப்பாற்றக்கூடிய வாழையில் நம் உடலுக்கு, ஒரு நாளைக்கு தேவைப்படும் வைட்டமின் ‘சி’ சத்து 33 சதவிகிதம் உள்ளது.

முட்டை - இது மூளையில் தகவல்களை சேமிக்கவும், நினைவுக்கு கொண்டு வரவும், கவனத்துடன் இருக்கவும், மனதை ஒருமுகப்படுத்தவும் உதவுகிறது. அசிடைல் கோலின் போதுமான அளவில் இல்லாவிட்டால் கவனக்குறைவையும் ஞாபகமறதியையும் ஏற்படுத்தும்.
வல்லாரைக்கீரை - நினைவாற்றலுக்கு உதவும்.

எள் - மூளையின் செயல்பாட்டுக்கு உதவுவதுடன், சந்தோஷ உணர்வையும் ஏற்படுத்துகிறது. எள்ளில் உள்ள துத்தநாகம் (ணுinஉ) ஞாபகசக்திக்கும் மூளை வளர்ச்சிக்கும் மூளையின் பாதுகாப்புக்கும் உறுதுணையாக இருக்கும்.

Thursday, December 17, 2015

இதோ ஒரே மாதத்தில் சர்க்கரை நோயில் இருந்து விடுதலை பெற..... Diabetes

சர்க்கரை நோய் இல்லாதவர்களே குறைவு என்று சொல்லும் வகையில் இன்று பெரிய தாக்கத்தை உருவாக்கி உள்ளது இந்த நோய்.


சர்க்கரை நோய்க்கு மருந்து, மாத்திரை, ஊசி இன்றி இந்த முறையில் முயற்சி செய்து பார்ப்போம்.

கொத்தமல்லி - அரை கிலோ, வெந்தயம் - கால் கிலோ என தனித்தனியாக எடுத்து பொன்னிறமாக வறுத்து தனித்தனியாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.

பின்னர், கலந்த பொடியில் 2 கரண்டி பொடியை 2 டம்ளர் (இருநூறு மில்லி) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்ளராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி 3 வேளைகளுக்கு சாப்பாட்டிற்கு 45 நிமிடத்திற்கு முன்னர் குடித்து வரவும்.

இதைச் செய்தவுடன் குறைந்தது 45 நிமிடம் வேறு எதனையும் (குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.

தொடர்ந்து இதனை ஒரு மாதம் குடித்து வந்தால் சர்க்கரை நோயில் இருந்து விடுதலை பெறலாம்.

உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து குடிப்பதற்கு முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனை செய்து இதனை சோதனையில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

Tuesday, December 1, 2015

வாழ்க்கையின் வெற்றிக்கு சில வழிகள் Success

மனிதன் சுகத்தை மட்டுமே விரும்புகின்றான். ஏனெனில் அவனுக்கென ஒரு கஷ்டம் வரும் போது அதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் மனிதன் அங்கலாய்த்துக்கொண்டிருப்பான்.

இயற்கையும் தான் தினமும் வணங்கும் கடவுளும் தன்னை கஷ்டப்படுத்துகிறான் என்பதே எல்லா மனிதர்களினதும் எண்ணமாக உள்ளது. கஷ்டம் வரும் போது ‘இதுவும் கடந்து போகும்’ என்று எண்ணுபவர்களை விட இறைவன் என்னை சோதிக்கின்றான் என்று எண்ணுபவர்களே அதிகம். கஷ்டங்களை அனுபவிக்கும் போது என்ன கொடுமை சரவணா? என்று நொந்துக்கொள்பவர்கள் வளர்ச்சியடையும் போது ஏன் இந்த வளர்ச்சி சரவணா? என்று கேட்பதில்லை.

என்னிடம் இந்த கார் இருக்கின்றது, இந்த அலைபேசி இருக்கின்றது, இப்படியொரு வீடு இருக்கின்றது, இவ்வளவு நகை இருக்கின்றது, நான் அங்கே செல்கின்றேன் இங்கே செல்கின்றேன் என்று பெருமிதம் கொள்பவர்கள்; கஷ்டம் வந்தால் மட்டும் எனக்கு மட்டும்தான் எல்லாம் நடக்கும் என்பார்கள். இதற்கூடாக மனிதன் கஷ்டத்தை ஏற்க மறுக்கின்றான் என்பது புலனாகிறது.

‘நல்லவர்களை கடவுள் சோதிப்பான் ஆனால் கைவிடமாட்டான்’ என்ற வசனம் அனைவரினது உள்மனதிலும் இருந்தால் இவ்வாறான அனுபவங்கள் சிறப்பிக்க வைக்குமே தவிற கசப்பிக்காது. பிறந்த நொடியிலிருந்து சந்தோஷமாகவும் வசதி வாய்ப்புடனும் மாத்திரம் வாழ்ந்து செத்து மடிந்தவர்கள் எவரும் கிடையாது. அதேபோல கஷ்டத்தையும் கண்ணீரையும் மாத்திரம் அனுபவித்து வாழ்ந்தவனும் எங்கும் கிடையாது என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

மிருகங்களை விட மனிதர்கள் கேவலமானவர்கள் என்று அனைவரும் கூறுவதுண்டு. ஆனால் மனிதனுடன் ஒப்பிடுகையில் மிருகங்கள் எந்தவொரு பாவத்தையும் செய்வதில்லை. ஒரு நாளைக்கு மனிதன் 9 புண்ணியங்களை செய்தால் 90 பாவங்களை செய்கின்றான். பாவங்களை செய்யவேண்டுமா என்று யோசித்து பாருங்கள். அந்த பாவத்தை செய்வதால் நமக்கு நன்மை கிட்டும் என்று எண்ணினால் அது தவறு. ஏனெனில்  நல்லது நடப்பதற்காக பாவம் செய்கின்றோம் என்று எண்ணி அதை செய்தால் அதனால் ஏற்படும் கர்ம வினை ஜென்மம் முடியும் வரை நம்மை தொடரும் என்பதை   அறிந்திருக்கவேண்டும். பிரச்சினைகளை கண்டு சோர்ந்து  விடக்கூடாது.  முயற்சி செய்யுங்கள். உங்களது அனைத்து முயற்சிகளும் தீர்ந்து போகும்பட்சத்தில் கடவுளின் கருணை தொடங்கும். அதற்கு இந்த 7 வழிகளை கடைபிடியுங்கள்

1.    எப்போதும் செயற்றிறனுடன் செயற்படுங்கள். உங்கள் வாழ்க்கையில் எடுக்கும் எந்தவொரு முடிவுக்கும் நீங்களே சாட்சி, நீங்களே பொறுப்பு என்று உறுதிகொள்ளுங்கள். எப்போதும் உயிர்ப்புடன் செயற்படுங்கள். இது உங்களை முன்னோக்கி பயணிக்க வைக்க உதவும்.

2.    உங்களது வாழ்க்கையில் நீங்கள் என்னவாக நினைக்கின்றீர்கள் என்று ஒரு முடிவு எடுக்கும் முன்னர் ஒரு திட்டத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள். எடுக்கும் முடிவு இறுதியில் சரியானதாக முடியும் என்று நம்பிக்கை வையுங்கள. அப்படி நம்பிக்கை இல்லாவிட்டால் திட்டத்தை மாற்றுங்கள். எப்போதும் தளர்ந்து போகாது திட்டங்களை முன்னெடுங்கள்.

3.    நீங்கள் முதலில் செய்யவேண்டும் என்று நினைக்கும் அல்லது கட்டாயம் செய்யவேண்டும் என்ற விடயத்தை முன்தள்ளிப்போடுங்கள். பின்தள்ளிப்போட்டால் வாழ்க்கை தாழ்வடையும். உதாரணத்துக்கு இன்று ஒரு மணித்தியாலம் தூங்கி எழும்பலாம் என்று நினைத்தாலும் அந்த ஒரு மணித்தியாலத்தில் செய்யவேண்டிய முக்கியமான வேலை பின்தள்ளிப்போகும். அதற்கு இடமளிக்காதீர்கள்.

4.    அனைவரும் வெற்றியடையவேண்டும் என்று எண்ணுங்கள். யாராலும் இந்த வேலையை செய்யமுடியும் என்று எண்ணுங்கள். ஒரு வேலையை அனைவரும் பகிர்ந்து செய்தால் சிறிய நேரத்தில் பெரிய சாதனையை செய்யலாம். யாரையும் ஒதுக்கி வைக்காதீர்கள். கூட்டாக சேர்ந்து முயற்சித்தால் அனுபவமும் அதிகரிக்கும்.

5.    ஒருவிடயத்தை பற்றி மற்றையவர்கள் மத்தியிலோ அல்லது ஒரு தனிநபரிடமோ பேசுவதற்கு முன்னர், எதிரில் இருப்போர் அல்லது இருப்பவர்கள் என்ன சொல்கின்றார்கள் என்று செவிமடுங்கள். செவிமடுத்த பின்னர் உங்களுடைய எண்ணத்தை வெளிப்படுத்துங்கள். இதன்மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்த்துக்கொள்ளமுடியும்.

6.    ஒன்றிணையுங்கள். ஒருவரை பற்றி மற்றொருவர் கேலி கூறினாலோ குறை கூறினாலோ காது கொடுக்காதீர்கள். முடிந்தால் தனிப்பட்ட நபர் பற்றி பேசும் போது கதைக்குரியவர் இல்லாதபோது அவரை பற்றி பேச வேண்டாம் என்று கூறுங்கள். முடிந்தளவு நல்லதை நினையுங்கள. முடியாவிடின் உங்களுக்கென்று சில கட்டுப்பாடுகளை வைத்துக்கொள்ளுங்கள். அனைவருடனும் ஒன்றாக இருக்க முயற்சியுங்கள்.

7.    உங்களது எண்ணங்களை கூர்மைப்படுத்துங்கள். அனைவரும் சமமானவர்கள் என்று உணருங்கள். ஏழை, பணக்காரன், சாதி, மதம் என்று பார்க்காதீர்கள். அவ்வாறு செய்பவர்களுக்கு சொல்லிக்கொடுங்கள். கேட்காவிடின் அவர் போக்கில் விட்டுவிடுங்கள். வாழ்க்கையை சமநிலையாக பராமரியுங்கள்.

நல்வாழ்க்கைக்கு கண்ணாடி சொல்லும் மூன்று பாடங்கள்! அவசியம் படியுங்கள் life


‘வாட்ஸ் அப்’பில் அவ்வப்போது சில தகவல்கள் வைரலாக பரவி அனைவரையும் கவர்வதுண்டு. அந்த வரிசையில் கண்ணாடி சொல்லும் மூன்று பாடங்கள் என்ற ஒரு செய்தி தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறது.

அது இதோ… ”நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ, கறையோ பட்டுவிட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி, கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை. உள்ளதை உள்ளபடி காட்டுகிறது அல்லவா? அதேபோல், உன் சகோதரனிடம், நண்பனிடம், கணவரிடம், மனைவியிடம் எந்த அளவுக்கு குறை இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும். எதையும் மிகையாகவோ, ஜோடித்தோ சொல்லக் கூடாது. துரும்பைத் தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது. இது கண்ணாடி சொல்லும் முதல் பாடம்!

கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும்போதுதான் உன் குறையைக் காட்டுகிறது. நீ அகன்று விட்டால் கண்ணாடி மௌனமாகிவிடும். அதேபோல் மற்றவரின் குறைகளை அவரிடம் நேரடியாகவே சுட்டிக்காட்ட வேண்டும். அவர் இல்லாதபோது முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது. இது கண்ணாடி தரும் இரண்டாவது பாடம்!

ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக் கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா? இல்லையே…! அதேபோல், நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ, எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும். அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமேயானால் திருத்திக்கொள்ள வேண்டும். இது கண்ணாடி தரும் மூன்றாவது பாடம்!

இனி கண்ணாடி முன்னால் நின்று முகத்தை அலங்கரிக்கும் போதெல்லாம் இந்த அறிவுரைகள் உங்கள் மனதை அலங்கரிக்கட்டும்”.

டீன் ஏஜ் பெண்களின் அம்மாக்களுக்கு டிப்ஸ்….. tips-for-moms-of-teenage-girls




பெண் குழந்தைக்கு ஓரளவு விவரம் தெரிய ஆரம்பிக்கிற போதே, அதன் உடல் பாகங்க ளைப் பற்றியும், அவற்றின் வேலைகளைப் பற்றியும் அந்த வயதுக்குத் தேவையான அளவுக்குக் கற்றுக் கொடுங்கள்.

இந்தக் காலத்துப் பெண் குழந்தைகள் எட்டு, ஒன்பது வயதிலேயே பூப்பெய்துகிறார்கள். எனவே அவர்களுக்கு முன்கூட்டியே மாத விலக்கு என்றால் என்ன, அது வந்ததும் என்ன செய்ய வேண் டும், அது பயப்படுகிற விஷயமல்ல என்பதையெல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

ஆண் வேலைக்காரர், டிரைவர், நெருங்கிய நண்பர், உறவினர் என எந்த ஆணுடனும் மகளைத் தனி மையில் விட்டுச் செல்லாதீர்கள்.

பூப்பெய்துதல் என்பது பெண்களுக்கு இயற்கையாக ஏற்படக் கூடிய ஒரு நிகழ்வு. ஆனால் சில பெண்கள் அதை செக்ஸ் உறவில் ஈடுபடுவதற்கான அங்கீகாரமாக நினைத்து வழிதவறிப் போவதுண்டு. வயதுக்கு வந்தது முதல் திருமணம் வரைத் தன்னைக் கட்டுப் பாடாக வைத்திருக்க வேண்டியது அவளது கடமை.

திருமணத்துக்கு முன்பான செக்ஸ் ஏன் தவறானது என்றும், அது எந்தளவுக்குப் பெண்களை பாதிக்கும் என்றும், அதன் பின் விளைவுகள் என்னவென்றும் உங்கள் மகளுக்கு எச்சரிக்கவேண்டும். அதைத் தவிர்த்து ஏன் கூடாது என்பதற்கான விளக்கம் சொல்லி விட்டால் அதுவே அவர்களுக்கு விழிப்புணர்வைத் தரும்.

டீன் ஏஜ் பெண்களின் அம்மாக்களுக்கு டிப்ஸ்…..
டீன் ஏஜ் பிள்ளைகளிடம் அதை பேசுங்கள்….

குழந்தைக்கு ஓரளவு விவரம் தெரிய ஆரம் பிக்கிற போதே, அதன் உடல் பாகங்களைப் பற்றியும், அவற்றின் வேலைகளைப் பற்றி யும் அந்த வயதுக்குத் தேவையான அளவுக் குக் கற்றுக் கொடுங்கள்.

குளிக்கும் போது அந்தரங்க உறுப்புகளை சுத்தப் படுத்தக் கற்றுக் கொடுங்கள். அந்த இடங்களைத் தொடுவதோ, பார்ப்பதோ அசிங்கம் என்ற மனப்பான்மையை விதைக்காதீர்கள்.

குழந்தை தன் அந்தரங்க உறுப்புகளைத் தொட்டு விளையாடுகிற போது அதைக் கிண்டல் செய்யவோ, திட்டவோ வேண்டாம். அது அதில் ஏதோ விஷயம் இருக்கிறது என்ற எண்ணத்தைக் குழந்தைக்கு உண்டாக்கும்.

குழந்தைக்கு எடுத்த எடுப்பிலேயே கருத்தரித்தல், பிள்ளை பிறப்பு போன்ற வற்றைக் கற்றுக் கொடுக்க முடியாது. கதைப் புத்தகங்கள், பூக்கள், விலங்குகள் படங்கள் போட்ட கலர் புத்தகங்களை வைத்துக் கொண்டு, விதையிலிருந்து பூ எப்படி உருவாகிறது என்றும், இது அம்மா கரடி, இது அப்பா கரடி, இது அவங்களோட குட்டி என்றும், குழந்தைக்குப் பாலூட்டும் அம்மாவைக் காட்டியும் மேற்சொன்ன விஷயங்களைப் புரிய வைக்கலாம்.

என் பொண்ணோட டிரெஸ் எனக்கும் சரியா இருக்கும். ரெண்டு பேரும் மாத்தி மாத்திப் போட்டுப்போம். நாங்க அம்மா- பொண்ணு கிடையாது. ப்ரெண்ட்ஸ் மாதிரி என்று சொல்லிக் கொள்வதில் பெருமை இல்லை. செக்ஸ் சம்பந்தப்பட்ட சந்தேகங்களை அம்மாவாகிய உங்களைத் தவிர வேறு யாராலும் குழந்தைக்கு மிகச் சரியாக விளக்க முடியாது. நீங்கள் மறுக்கிற பட்சத்தில், அது அதற்கான விளக்கத்தை வேறு தவறான நபர்களிடமிருந்து பெறக் கூடும்.

ஸ்பரிசத்தில் உள்ள வித்தியாசத்தைப் பெண் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள்

உங்கள் பெண் குழந்தைக்கு விவரம் தெரிய ஆரம்பிக்கிற போதே எளிய மொழியில் பாலியல் பலாத்காரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

உடலின் ஒவ்வொரு உறுப்பைப் பற்றியும், அவற்றின் பயன்கள் பற்றியும் சொல்லிக் கொடுங்கள்.

நல்ல ஸ்பரிசத்துக்கும், கெட்ட எண்ணத்துடனான ஸ்பரிசத்துக்கும் உள்ள வித்தியாசத்தை மகளுக்கு உணர்த்துங்கள்.

யாரும் அவளது அந்தரங்க உறுப்புகளைத் தீண்ட அனுமதிக்கக் கூடாது என்பதைக் கண்டிப்புடன் சொல்லிக் கொடுங்கள்.

ஸ்பரிசத்தில் உள்ள வித்தியாசத்தைப் பெண் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள். நல்ல எண்ணத்துடன் தொடுவதற்கும், கெட்ட எண்ணத்துடன் தொடுவதற்கும் உள்ள வித்தியா சத்தை அது உணர வேண்டும். கெட்ட ஸ்பரிசத்தை உடனடியாக எதிர்க்கவும் கற்றுக் கொடுங்கள்.

எந்த ஆணாவது அவளைத் தீண்டும் முறையோ, பேசும் முறை யோ தவறாகத் தெரிந்தால் உடனடியாக உங்களிடம் தெரியப்படுத்தச் சொல்லுங்கள். அந்த மாதிரி நேரங்களில் அவளைக் குற்றம் சொல்லாமல், அவளுக்கு நீங்கள் துணை இருப்பீர்கள் என்ற தைரியத்தை உண்டாக்குங்கள்.