Wednesday, November 2, 2016

​வளைகாப்பு ஏன்?


”வளைகாப்பு” என்ற சடங்கு முக்கியமாக முதல் முறையாகக் கருவுற்ற பெண்களுக்கு அவரின் கணவர், பெற்றோர் உறவினர்களால் செய்யப்பெறும் ஓர் சமயச் சடங்காகும். அநேகமாக கருவுற்ற பெண்களுக்கு 5 ஆம் 7, 9 ,ஆம் மாதங்களில் ஏதாவது ஒன்றில் வளைகாப்பு என்ற சடங்கு நிகழ்த்தப் பெறுகின்றது.
நம் இந்து தர்மத்தில் எந்த ஒரு சடங்கும் சம்பிரதாயங்களும் பலரது வாழ்வில் உணர்ந்து தெளிந்த விஷயங்களை உளப்பூர்வமாக ஆராய்ந்து அது சரியென ஒருங்கே எல்லோருமாய் உணரும் போது அது சடங்காக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அவ்வாறு ஒவ்வொரு பெரியோர்களும் வாழ்ந்து பார்த்து கடைப்பிடித்த சடங்கே வளைகாப்பு அல்லது சீமந்தம் என்னும் இச் சடங்காகும்.
கருவுற்றிருக்கும் இளம் பெண்கள் பிரசவ காலம் நெருங்க நெருங்க பிரசவ நிகழ்வின் பயத்தினால் உளத் தென்பை இழந்து விடுகின்றார்கள். அதனால் அவர்களை அனுபவம் மிக்க தாயார், சகோதரிகள், மாமி, மச்சாள்மார், உற்றார் உறவினர் தங்கள் அனுபவங்களை அவர்களுக்கு கூறி தேற்றுகின்றனர். இருந்தும் ஒரு மனப்பயம் அவர்களுக்குள் இருக்கத்தான் செய்கின்றது. அதனால் இறை நம்பிக்கை கொண்டவர்கள் சமயசடங்குகள் செய்வதன் மூலம் அவர்களை மேலும் தேற்றி மகிழ்விக்கின்றனர்.