Monday, November 30, 2015

இன்றைய காதலின் நிலை என்ன தெரியுமா? Today Love



மனிதர்களுக்கு மட்டுமல்ல அனைத்து ஜீவராசிகளுக்கும் வருவது காதல்.
காதல் வலியது, களங்கமில்லாதது என்று அடுக்குமொழி வசனங்கள் பேசிக்கொண்டே போனாலும், இன்றைய உலகில் காதல் என்பது ஒரு கண்ணாமூச்சி விளையாட்டாகிவிட்டது.

காலையில் அரும்பி மாலையில் மலருவது காதல் என்று வர்ணித்தார் திருவள்ளூவர், மனிதர்களுக்குள் ஏற்படும் இராசயன மாற்றங்கள் என்கிறது அறிவியல்.

ஆனால், அறிவியல் பார்வை ஒருபுறம், சங்ககால வர்ணிப்பு மறுபுறம் என இரண்டும் இணைந்து மனிதர்களுக்குள் விளையாடும் இன்றைய காதலின் நிலை என்ன தெரியுமா?

காதலை தெரியப்படுத்திய பின்னர் ஆண்மகனின் ஊதியத்தை பார்த்து, இவனுக்கு ஊதியம் குறைவாக இருக்கிறதே! இவனை எப்படி காதலிப்பது என்று யோசிக்கிறார்கள் பெண்கள்.

இவர்கள் யோசிப்பது எதற்காக என்றால், நாம் விரும்பும் வாழ்க்கையை இவன் அமைத்து கொடுப்பானா? நம்மை நன்றாக வைத்துக்கொள்வானா? என்பதற்காகத்தான், இவையெல்லாம் உயிரற்ற பொருட்கள் மீது கொண்ட ஆசையால்தான்.

சொல்லப்போனால் பெண்கள் தங்களை ஏமாற்றுவதற்கு ஆண்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.

அப்படியே தட்டுத்தடுமாறி காதல் செய்ய ஆரம்பித்தாலும், ஆண்மகன் அவளைக்கூட்டிக்கொண்டு எல்லா இடங்களையும் ஊர்சுற்ற வேண்டும், அதுமட்டுமின்றி அவளின் பாதுகாப்பிற்காக எல்லா செல்லும் இடங்களுக்கு சென்று வரவேண்டும்.

இதில், ஒரு கொடுமை என்னவெனில் ஒரு பெண்ணை ஆண்மகனிடம் இருந்து ஒரு ஆண்மகனே காப்பாற்றுவதுதான்.



இதற்கடுத்தவாறு, ஆண்கள் தான் காதலிக்கும் பெண், நமக்கு நல்ல வாழ்க்கைத்துணையாக இருக்க வேண்டும், நம் குடும்பத்தை அனுசரித்து வாழ்வில் ஒளி வீசும் சுடராக இருக்க வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்ப்பதில்லை.

அவர்கள் எதிர்பார்ப்பது ஒன்று, நல்ல பேஷனாக அவள் இருக்கவேண்டும், ஆனால், என்னதான் ஆண்கள் ஒருபெண்ணை மனதார உருகி நேசித்தாலும், அவளை விட அழகான பெண்களை பார்க்கும் அவனின் மனம் தடுமாறத்தான் செய்யும்.



சிலபேர், தடுமாற்றத்தை கடைக்கண் பார்வையோடு நிறுத்திவிடுகிறார்கள், ஆனால் பலரோ பார்வை முழுவதையும் திருப்பி, கடைசியில் காதலியையே மாற்றி விடுகிறார்கள்.

இவ்வாறு ஒரு பெண்ணை பார்ப்பதும், பின்னர் காதல் கொள்வதும், அதற்கடுத்தகட்டமாக அவளை கழற்றிவிடுவதுமாக இன்றைய காதல் செல்கிறது.

சிலஜோடிகள், கஷ்டப்பட்டு காதல் புரிந்து திருமணத்தில் சென்று முடிப்பார்கள், ஆனால் காதலிக்கும்போது தேவைப்பட்ட அதே பணம், குடும்பம் நடத்துவதற்கு சற்று அதிகமாகவே தேவைப்படும்.

பணம் சற்று அதிகமாக தேவைப்படும்போது, வாழ்வில் காதல் சற்று அதிகமாகவே குறைந்துவிடும், இதுவே உறவில் விரிசல் வருவதற்கு காரணமாகிறது.

சிலர் அனுசரித்து வாழ்க்கையை நடத்துகின்றனர், பலரோ வாழ்வை பிரித்துவிடுகின்றனர், இதனால் உடையும் மனம், தடுமாறி தள்ளாடுகிறது வாழ்க்கை.